உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லட்சக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள்... பாதுகாப்பில் பிரச்னை ஏற்படும்; முன்னரே எச்சரித்த பெங்களூரு போலீசார்

லட்சக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள்... பாதுகாப்பில் பிரச்னை ஏற்படும்; முன்னரே எச்சரித்த பெங்களூரு போலீசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: '' பெங்களூரு அணிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் ஒரே இடத்தில் கூடும் போது பாதுகாப்பு வழங்குவதில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது, '' என போலீசார் முன்னரே எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.பெங்களூருவில் கிரிக்கெட் வீரர்களை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடினர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.அந்த வகையில், நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுவதற்கு முன்னர், அதற்கு எதிராக போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.இது தொடர்பாக, சட்டசபை பாதுகாப்பு துணை கமிஷனர் எம்.என்.கரிபசவண்ணா கவுடா, பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் தனிநபர் துறை செயலர் சத்தியவதி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளதாக தெரிகிறது.அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:பெங்களூரு அணிக்கு நாடு முழுதும் ரசிகர்கள் உள்ளனர். விதான் சவுதா முன்பு லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கூட வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு படையினர் பற்றாக்குறையால், கூட்டத்தை கட்டுப்படுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.கூட்டத்தை கட்டுப்படுத்த ஜூன் 4 வரை ஆன்லைன் வழியாகவும், ஆப்லைன் வழியாகவும் நுழைவு சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்.கொண்டாட்டம் நடக்கும் நாள் அன்று, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலகத்திற்கு குடும்பத்தினரை அழைத்து வர தடை விதிக்க வேண்டும். அன்றைய தினம் அரைநாள் விடுப்பு வழங்குவது சிறந்தது. பாரம்பரிய கட்டடம் என்பதால், விதான் சவுதாவில் கண்காணிப்பு உள்கட்டமைப்பு கிடையாது.நிகழ்ச்சிக்கு என ஒரு மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அதனை பொதுப்பணித்துறையினர் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். நிகழ்ச்சி துவங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர், அந்த இடத்தில் ஏதேனும் சதி வேலை உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கூட்டத்தை கண்காணிக்க ட்ரோன்கள் தேவை. பாதுகாப்புக்கு நகருக்கு வெளியே இருந்து கூடுதல் போலீசாரை வரவழைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பராமரிக்க போக்குவரத்து போலீசாரின் ஒத்துழைப்பும் தேவை. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த எச்சரிக்கையையும் மீறி வெற்றி கொண்டாட்டம் நடந்ததில் 11 அப்பாவிகளின் உயிர் பரிதாபமாக பறிபோனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

thanventh R
ஜூன் 09, 2025 09:54

முதல் அமைச்சர் மற்றும் DCM இரண்டும் ராஜினாமா செய்ய வேண்டும். இவர்கள் தான் முழு பொறுப்பு. இந்த சாவுக்கு காரணம்


Kanns
ஜூன் 09, 2025 09:01

Arrest Regional FanaticStoker PartyHopper PowerMisusing MegaLoot Siddaramaih & Co for Misplaced SelfPrideFanatic Celebrations Just for NameBengalore in RCB When Most of its Players being Outsiders & Despite Police Advise. SHAME


Kasimani Baskaran
ஜூன் 09, 2025 06:30

கட்டுக்கடங்காத கூட்டம் என்றால் தடியடி நடத்த வேண்டியதுதானே? டிரோன் கூட போலீசிடம் இல்லை என்பது மகா மட்டமான ஏற்பாடு.


N Annamalai
ஜூன் 08, 2025 21:09

காவல் துறை எச்சரிக்கையை மீறியது தவறு .நேரடி ஒளிபரப்பு செய்யும்போதே தெரிந்தது பெரிய கூட்டம் என்று .ஆனால் யாரோ வெற்றிகொண்டாடத்தில் முடிவு சரியாக எடுக்க வில்லை .


முருகன்
ஜூன் 08, 2025 20:13

ரசிகர்களை தடுக்க அல்லது வர வேண்டாம் என கூறுவதில் அரசு மற்றும் காவல் துறைக்கு என்ன பிரச்சினை அப்பாவி மக்கள் உயிர் தானே என்ற எண்ணம் தான் காரணமாக இருக்கும் நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


Ramesh Sargam
ஜூன் 08, 2025 19:52

போலீசார் முன்னரே எச்சரித்த பிறகும் எப்படி துணை முதல்வர் சிவகுமார் அந்த வெற்றி கொண்டாத்திற்கு அனுமதி வழங்கினார். முதல்வர் சித்தராமையாவது அதை தடுத்தி நிறுத்தி இருக்கவேண்டும். இவர்கள் இருவரும் தவறு செய்துவிட்டு, நகர போலீஸ் கமிஷனரை சஸ்பெண்ட் செய்தது சரியல்ல.


K V Ramadoss
ஜூன் 08, 2025 19:41

எச்சரிக்கையை யார் மீறினார்கள் ? யார் மீற சொன்னார்கள் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை