உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு கோர சம்பவம்; தாமாக முன்வந்து இன்று பிற்பகல் விசாரிக்கிறது நீதிமன்றம்

பெங்களூரு கோர சம்பவம்; தாமாக முன்வந்து இன்று பிற்பகல் விசாரிக்கிறது நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இன்று விசாரிக்கிறது. ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விதான் சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெங்களூரு அணி வீரர்கள், சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டனர். அப்போது, பெங்களூரு அணி வீரர்களை பார்ப்பதற்காக சின்னசாமி மைதானம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இதனால், ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து கப்பன் பார்க் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவரவர் குடும்பத்தினரிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவத்திற்கு கர்நாடகா அரசே காரணம் என்று பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சரும், பா.ஜ., எம்.பி.,யுமான ஷோபா கரண்ட்லாஜே வலியுறுத்தியுள்ளார். அரசு விழா அல்லாத இந்த நிகழ்ச்சியை விதான் சவுதாவில் நடத்தியது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், 11 பேரின் உயிரிழப்பிற்கு யார் பொறுப்பேற்க போகிறார்கள் என்றும் கேட்டுள்ளார். மேலும், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நிலையில், நாடு முழுதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த வழக்கை பிற்பகல் 2.30 மணிக்கு விசாரிக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sankaranarayanan
ஜூன் 08, 2025 19:48

கிரிக்கெட்டில் விளையாடுபவர்களே 11-பேர்கள்தான் இவர்கள் அனைவருமே இறந்து விட்டால் பிறகு இந்த விளையாட்டே இருக்காதே . யாருதான் விளையாடப்போகிறார்கள்.


Pradeep Kumar
ஜூன் 05, 2025 16:42

11 பேர் இறப்பு. இதுக்கு நீங்கள்RCB தோத்து இருக்கலாம். வெற்றி பெற்றும் தொற்று விட்டனர்.


thanventh R
ஜூன் 05, 2025 14:56

court should ask them to resign and give severe punishment who are involved on this and should be treated as murder case.


சிட்டுக்குருவி
ஜூன் 05, 2025 14:41

காவல் துறை பொறுப்பு ஏற்கவேண்டும் .தலைமை காவல் துறை அதிகாரியை பதவிநீக்கம் செய்து விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் .சட்டம் ஒழுங்கு பாதுகாப்பது அவர்களுடைய கடமையாகும் . நாடு முழுவதிலும் காவல் துறை ஏவல் துறையாக மாறிவிட்டதே இதற்க்கு காரணம் .அரசியல்வாதி கைநீட்டினால் தான் இவர்கள் ஆடுவார்கள் .


Brahamanapalle murthy
ஜூன் 05, 2025 13:52

the court first should ask whom the government has arrested primarily ?. The logic adopted by the court in giving arrest warrant to Allu Arjun for one stampede death should be extended to this also. then only we will have faith in judiciary


SUBRAMANIAN P
ஜூன் 05, 2025 13:28

இந்த சம்பவம் நடக்க கர்நாடக அரசே காரணம்.. கொஞ்சமும் பொறுப்பு இல்லாமல் பெருமைக்கு ... கதையாக கிரிக்கெட் வீரர்களுக்கு அரசு விழா, வரவேற்பு எடுக்க எண்ணி பல்லாயிரக்கணக்கான மக்களின் கஷ்டத்திற்கும், பலரின் படுகாயத்திற்கும், பதினோரு பேர்களின் உயிரிழப்பிற்கும் முழுக்க முழுக்க காரணம் கர்நாடக அரசு. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பதவி விலகவேண்டும். கடமை தவறிய கர்நாடக அரசை கழிக்கவேண்டும். அதுவே மற்ற மாநில அரசுகளுக்கு படமாக அமைய வேண்டும். இதில் நான் நிறைய எழுதலாம்.. ஆனால் பிரசுரம் பண்ணமாட்டார்கள். இந்த இடத்தில திருடன் மக்கள்தான்.. அவர்கள்தான் திருந்தவேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 05, 2025 13:03

கூட்டம் அதிகமாக துவங்கியவுடனே கண்ணீர்புகை மூலமாகவாவது கூட்டத்தை கலைத்திருந்தால் இப்போ DK சிவகுமார் நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டியிருக்காது. தனியாருக்கு உரிமையான அணியின் வெற்றிக்கு வரிப்பணத்தில் அரசு விழா சட்ட விரோதம். அதற்காக சித்தாவும் இவனும் சிறையிலடைக்கப்பட வேண்டும்.


Svs Yaadum oore
ஜூன் 05, 2025 12:16

சென்ற வருடம் அக்டோபர் மாதம், சென்னை விமானக் கண்காட்சி .....சென்னை மெரினா கடற்கரையில் விமான சாதனை படைக்கும் கூட்டம் கூடியது.... ஆனால், திட்டமிடல் இல்லாததால், கூட்ட நெரிசலில் ஐந்து பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு பிறகு விடியல் ஆட்சியில் என்ன நடந்தது?? ஒரு விசாரணையும் இல்லாமல் அப்படியே ஊத்தி மூடி விட்டார்கள். இதையும் தானாக முன்வந்து நீதிமன்றம் விசாரிக்கனும் .....


venugopal s
ஜூன் 05, 2025 18:14

தாங்கள் கும்பமேளா கூட்ட நெரிசலில் நூற்றுமுப்பது பேர் இறந்து போனதை மறந்து விட்டீர்களே!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை