மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
8 hour(s) ago
பெங்களூரு : பெங்களூரு ஆசிரியர் தொகுதி தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ், ம.ஜ.த., வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தார்.கர்நாடகா சட்ட மேலவைக்கு, பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் இருந்து, பா.ஜ., சார்பில் எம்.எல்.சி.,யாக தேர்வு செய்யப்பட்டவர் புட்டண்ணா. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரசில் இணைந்தார். சட்டசபை தேர்தலில், பெங்களூரு ராஜாஜிநகர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.புட்டண்ணாவின் ராஜினாமாவால், பெங்களூரு ஆசிரியர் தொகுதிக்கு அடுத்த மாதம் 16 ம் தேதி, இடைத்தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் சார்பில் புட்டண்ணா போட்டியிடுகிறார். இவர், பெங்களூரு சாந்திநகரில் உள்ள, தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் ஜமீர் அகமதுகான், எம்.சி.சுதாகர், மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா உடன் இருந்தனர்.இந்த தேர்தலில் ம.ஜ.த., வேட்பாளர் ரங்கநாத்தும் நேற்று, வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னாள் முதல்வர் குமாரசாமி, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி., தேவகவுடா, பா.ஜ., - எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா உடன் இருந்தனர். இந்த வேட்பாளருக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்துஉள்ளது.
2 hour(s) ago | 9
7 hour(s) ago
8 hour(s) ago