உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆசியாவில் போக்குவரத்து நெரிசலில் மோசமான நகரம் பெங்களூரு!

ஆசியாவில் போக்குவரத்து நெரிசலில் மோசமான நகரம் பெங்களூரு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: ஆசியாவில் போக்குவரத்தில் மோசமான நகரம் என்ற பெயரை கர்நாடக தலைநகர் பெங்களூரு பெற்றுள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சராசரியாக 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆவது தெரியவந்துள்ளது.கர்நாடகா தலைநகரான பெங்களூருவில் ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. இதனால், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து பணிபுரிகின்றனர். பணி நிமித்தமாகவும், சொந்த பணிகளுக்காகவும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். இதனால், இங்கு போக்குவரத்து நெரிசல் என்பது சர்வ சாதாரணம். இந்நிலையில், 'டாம் டாம் டிராபிக் இண்டெக்ஸ்' என்ற நிறுவனம் 55 நாடுகளில் 387 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு நடத்தியது. பயண நேரம், எரிபொருள் செலவு, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட தகவல்களை வைத்து இந்த ஆய்வு நடந்தது.இதில், ஆசியாவில் போக்குவரத்து நெரிசலில் மோசமான நகராக பெங்களூரு தேர்வாகி உள்ளது. இந்நகரில் 10 கி.மீ., தூரத்தை கடக்க 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆவது தெரியவந்துள்ளது.இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள நகரங்கள் பின்வருமாறு( 10 கி.மீ.,தூரத்தை கடக்க ஆகும் நேரம்)2வது இடத்தில் மஹா.,வின் புனே- 27 நிமிடங்கள், 50 நொடிகள்3வது இடத்தில் பிலிப்பைன்ஸின் மணிலா- 27 நிமிடங்கள், 20 நொடிகள்4வது இடத்தில் தைவானின் தைசங்- 26 நிமிடங்கள், 50 நொடிகள்5வது இடத்தில் ஜப்பானின் சபோரா - 26 நிமிடங்கள், 50 நொடிகள்6வது இடத்தில் தைவானின் கயோசியுங் - 26 நிமிடங்கள்7 வது இடத்தில் ஜப்பானின் நகோயா - 24 நிமிடங்கள் , 20 நொடிகள்8 வது இடத்தில் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா- 23 நிமிடங்கள் , 20 நொடிகள் ஆவது தெரியவந்துள்ளது.சர்வதேச அளவில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் 10 கி.மீ., தூரத்தை கடக்க 37 நிமிடங்கள் 20 வினாடிகள் ஆகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஜன 02, 2025 12:56

கண்டவனுக்கு கார், டூ வீலர் வித்து நாட்டை வல்லரசாக்குறாங்க.


Kasimani Baskaran
ஜன 02, 2025 08:49

பொதுப்போக்குவரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை செய்யாமல் வேறு என்ன செய்தாலும் தீர்வு கிடையாது. தவிரவும் ஜக்கார்த்தாவை ஜப்பானுடன் ஒப்பிடுவது மகா மோசம். இதில் தாய்லாந்து இல்லவே இல்லை என்பதுதான் சோகம்


naranam
ஜன 01, 2025 23:24

டெக் சிட்டி இல்லையா பின்ன? சபாஷ் சித்தா! நல்ல நிர்வாகம்!


Rpalni
ஜன 01, 2025 22:47

காரணம் என்னவென்றால் பெங்களூரில் வேலைக்கு என்று வருபவர்கள் இங்கேயே சொந்த வீடு/ டூ வீலெர் / கார் வாங்கி செட்டில் ஆகி விடுகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை