உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்டர்போல் உதவியை நாட பாரத்போல் தளம் துவக்கி வைப்பு

இன்டர்போல் உதவியை நாட பாரத்போல் தளம் துவக்கி வைப்பு

'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் உதவியை உடனடியாக பெறும் வகையில், 'பாரத்போல்' எனப்படும் புதிய ஆன்லைன் தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பில், 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன. வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளையும் மற்றும் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், இந்த அமைப்பு உதவுகிறது.இது தவிர, சர்வதேச அளவில் நடக்கும் குற்றங்கள், முக்கிய குற்றவாளிகள் உள்ளிட்ட விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.இந்த அமைப்புடன் தொடர்பு கொள்ளும் நேரடி முகமையாக தற்போது, நம் நாட்டின் சார்பில் சி.பி.ஐ., செயல்படுகிறது. இதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன; கால விரயமும் ஏற்படுகிறது.இதைத் தடுக்கும் வகையில், சி.பி.ஐ., சார்பில், பாரத்போல் என்ற புதிய ஆன்லைன் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மாநில போலீஸ் மற்றும் பிற விசாரணை அமைப்புகளும், தங்களுடைய கோரிக்கைகளை நேரடியாக இன்டர்போல் அமைப்பிடம் வைக்க முடியும். வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிப்பதற்கு உதவி கேட்பதுடன், நம் நாட்டில் பதுங்கியிருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் குறித்தும் மாநில போலீஸ் மற்றும் பிற விசாரணை அமைப்புகள் தெரிந்து கொள்ள முடியும்.இதைத் தவிர, சர்வதேச அளவில் நடக்கும் குற்றங்கள், குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் கிடைப்பதால், உள்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், மாநில போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு உதவும்.இந்த புதிய இணையதளத்தை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டில்லியில் நேற்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சிறப்பான சேவையாற்றிய, 35 சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி போலீஸ் விருதுகளை அமித் ஷா வழங்கினார்.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
ஜன 07, 2025 23:47

ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் ஒரு போலீஸ் துறையை உருவாக்குவது நல்லது. ஓட்டுவங்கி அரசியலுக்குகாக தீவிரவாதிகளை கையிலேந்தி கொஞ்சும் மாநில அரசை நம்ப முடியாது. தீவிரவாதிகளை ஒடுக்க, அர்பன் நக்சலைட்களை கசக்கி பிழிய, மத்திய அரசின் போலீஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்பட வேண்டும். அண்ணா யூனிவெர்சிட்டியில் யார் அந்த சார் என்று மக்கள் மண்டியிட்டு மாநில அரசை கெஞ்சிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.


சாண்டில்யன்
ஜன 08, 2025 04:18

தெரியாமல் கேட்கவில்லை தெரிந்தால்தான் கேட்கிறார்கள் இது தெரியாமல் மக்கள் கெஞ்சுவதாக சொல்வது அபத்தம் சும்மா விளம்பரத்துக்காக மிரட்டலாம் NO USE


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை