உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் மீண்டும் தேஜ ஆட்சி: கருத்துக்கணிப்புகளில் தகவல்

பீஹாரில் மீண்டும் தேஜ ஆட்சி: கருத்துக்கணிப்புகளில் தகவல்

பாட்னா: பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.பீஹாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு நவ.,6 மற்றும் இன்று( நவ.,11) இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. 121 தொகுதிகளுக்கு நடந்த முதற்கட்ட தேர்தலில் 65 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இரண்டாம் கட்ட தேர்தலில் 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.இந்த தேர்தலில் பாஜ, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேஜ கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியது. இத்துடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற கட்சியை துவக்கி 3வதாக களமிறங்கியுள்ளார். இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ன.இந்த கருத்துக்கணிப்புகளில் மீண்டும் தேஜ கூட்டணியே ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் களமிறங்கியுள்ள தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரால் எந்த தாக்கமும் ஏற்படாது எனவும் , அவரது கட்சி சொற்ப தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் இந்த கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.கருத்துக்கணிப்பு முடிவுகள்

டைம்ஸ் நவ்

தேஜ கூட்டணி: 142மகாகத்பந்தன்: 95ஜன் சுராஜ்: 1மற்றவர்கள்: 5

ஜேவிசி கருத்துக்கணிப்பு

தேஜ கூட்டணி :135- 150 மகாகத்பந்தன் :88 - 103ஜன் சுராஜ் : 0-1மற்றவர்கள் :3-6

மாட்ரிஸ்

தேஜ கூட்டணி :147-167மகாகத்பந்தன் :70 - 90ஜன் சுராஜ் : 0-2மற்றவர்கள் :2-8

பீப்பிள்ஸ் இன்சைட்

தேஜ கூட்டணி :133- 148மகாகத்பந்தன் :87 - 102ஜன் சுராஜ் : 0-2மற்றவர்கள் :3-6

போல்ஸ் ஆப் போல்ஸ்

தேஜ கூட்டணி : 138 -148மகாகத்பந்தன்: 82 - 98ஜன் சுராஜ் :0 -2மற்றவர்கள்: 3- 7

பீப்பிள்ஸ் பல்ஸ்

தேஜ கூட்டணி : 133 -159மகாகத்பந்தன் :75 -101ஜன் சுராஜ் :0-1மற்றவர்கள்:0-2

டைனிக் பாஸ்கர்

தேஜ கூட்டணி: 145 - 160மகாகத்பந்தன் : 73 - 91ஜன்சுராஜ்: 0 - 3மற்றவர்கள் 5 - 7


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Raman
நவ 11, 2025 22:16

Tonight tickets booked to Thailand..return journey after a month when massive defeat debates subside...after that more rubbish utterances till another blow..no end to that..


Nathansamwi
நவ 11, 2025 21:57

போச்சுடா ...அப்போ எல்லா பீஹாரியும் தென் மாநிலத்துக்கு தான் வேலைக்கு வருவானுங்க ...


எஸ் எஸ்
நவ 11, 2025 21:27

முதலில் EVM மூலம் பிஜேபி வெற்றி பெறுகிறது என்று பிரச்சாரம் செய்தார்கள். இப்போது ஓட்டு திருட்டு மூலம் வெற்றி என்று பிரச்சாரம் செய்வார்கள். கர்நாடகாவிலும் ஹிமாசலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது எப்படி என்றால் பதில் சொல்ல மாட்டார்கள்


Venkatasubramanian krishnamurthy
நவ 11, 2025 21:01

இதன்மூலம் தெரிய வருவது யாதெனில் பிரசாந்த் கிஷோர் நேரிடையாக அரசியல் கட்சிக்கு செயல்படாமல் களமிறங்கி வாக்குகளைப் பிரித்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்தார் எனக் கொள்ளலாம்.


Priyan Vadanad
நவ 11, 2025 20:25

இதுதான் தேர்தல் நடக்குமுன் உறுதி செய்யப்பட்ட சங்கதியாச்சுதே. முன்பு மெஷின் இப்போது கமெஷின். அவ்வளவுதான்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
நவ 11, 2025 21:32

அதாவது திராவிட மாடல்


Venkat esh
நவ 11, 2025 22:08

வந்துட்டாங்க... குனிந்து கும்பிடு போட.... தோத்தாங்கோளிகளின் புலம்பல் நாடெங்கும் கேட்கட்டும்..


Raman
நவ 11, 2025 22:12

Rs 200 max..no use shouting


Narasimhan
நவ 11, 2025 20:23

கொஞ்சம் மண்டையை யூஸ் பண்ணுங்க. எக்ஸிட் போல் என்பது வோட்டு போட்டுவிட்டு வெளியேவந்தவர்களிடம் கேட்பது. இதற்கும் சாருக்கும் என்ன சம்பந்தம்


தமிழ்வேள்
நவ 11, 2025 19:56

ஸ்ரீ மோதி ஜி அவர்களே, ஒரு மாநிலத்தை பிரிக்க கவர்னர் கருத்துருவும், அதன்மீது ராஷ்ட்ர பதியின் பரிந்துரையும் மட்டுமே போதுமானது என சொல்வது நமது அரசியலமைப்பு சட்டம்.. அதன்படி தமிழகத்தை இரண்டு அல்லது மூன்று மாநிலங்களாகவும், சென்னையை தனி யூனியன் பிரதேசம் ஆகவும் பிரித்து விடுங்கள்.. எங்களுக்கு ஒன்று பட்ட பாரதம் ஹிந்து தர்மம் மட்டுமே தேவை. பால் ஒழுக்கம் அற்ற திராவிடம் நாஸ்திகம் தேவையில்லை..அறுபதாண்டு கால சித்திரவதைக்கு தயவு கூர்ந்து முடிவு கட்டுங்கள்.. தமிழகத்தை பிரிக்காமல் திராவிட மாயை சினிமா வெறி அழியாது..


தாமரை மலர்கிறது
நவ 11, 2025 19:51

இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிஜேபியை யாராலும் அசைக்க முடியாது.


Vijay
நவ 11, 2025 19:50

கதறி கதறி ரத்த வாந்தி எடுங்க.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 11, 2025 19:43

மீடியாக்களின் திணிப்பு.


புதிய வீடியோ