உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் 98 சதவீதம் வாக்காளர்கள் ஆவணம் சமர்ப்பிப்பு; தேர்தல் ஆணையம் தகவல்

பீஹாரில் 98 சதவீதம் வாக்காளர்கள் ஆவணம் சமர்ப்பிப்பு; தேர்தல் ஆணையம் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹாரில் 98 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.விரைவில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பீஹாரில் வரைவு வாக்காளர் பட்டியலை அண்மையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பட்டியல் பற்றி ஏதேனும் ஆட்சேபம் தெரிவிக்க விரும்புவவர்களுக்கு செப்.1ம் வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்து இருந்தது.இந் நிலையில் பீஹாரில் 98.2 சதவீதம் வாக்காளர்களின் அடையாள ஆவணங்கள் பெறப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் மேலும் கூறியதாவது;ஜூன் 24ம் தேதி தொடங்கிய சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்களிடம் இருந்து அடையாள ஆவணங்கள் பெறப்பட்டன. இதுவரை 98.2 சதவீதம் வாக்காளர்கள், தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளனர். செப்.1ம் தேதிக்குள் எஞ்சிய வாக்காளர்கள் (1.8 சதவீதம்) தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்துக் கொள்ளலாம்.வழக்கமாக வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை மட்டுமின்றி, தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போதும் சமர்ப்பிக்க தவறியவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

vbs manian
ஆக 24, 2025 19:03

காங்கிரஸ் நாட்டின் அடிப்படை ஆதாரங்களான ராணுவம் தேர்தல் கமிஷன் ஆகியவற்றை தாக்க ஆரம்பித்துள்ளது. ஆட்சி கிடைக்காத விரக்தி. தேர்தல் ஆணையம் ஆதாரம் கேட்டும் காங்கிரஸ் கொடுக்கமுடியவில்லை. இது நாட்டில் குழப்பம் விளைவித்து நெருக்கடி நிலையை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி. பங்களா தேஷில் இதுதான் நடந்தது. தேர்தல் கமிஷன் தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சி மீது சட்டத்துக்கு உற்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மனிதன்
ஆக 24, 2025 20:45

மொதல்ல தேர்தல் ஆணையம் யோக்கியமானதா இருந்தா ராகுல் கேட்ட டிஜிட்டல் ஆதாரங்களை கொடுக்கட்டும்...ராகுல் இதையெல்லாம் பார்க்கமாட்டார் என்றுதான் கட்டுகட்டாக பேப்பரை கொடுத்தார்கள் ஆனார் ராகுல் ஆறு மாதமாக சிரமப்பட்டு தில்லுமுல்லை கண்டுபிடித்தார்...டிஜிட்டல் ஆதாரத்தை கொடுக்க தில்லு இருக்கா?


M Ramachandran
ஆக 24, 2025 18:35

இப்பொ சூப்பு தந்தை இருக்கும் அமெரிக்காவிற்கு போயிருக்கு. மேலாசிட்டு வந்ததும் பார்க்கும்.


M Ramachandran
ஆக 24, 2025 18:33

சந்தேக திற்கு பப்புவைய்ய அழைத்து உரக்க படிக்க சொல்லி பார்க்க செய்ய வேலாண்டியது தானெ.


GMM
ஆக 24, 2025 18:24

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தேர்தல் ஆணையம் பணி. பட்டியல் தயாரிப்பு முழு உதவிகள் மாநில அரசு ஊழியர்கள். ஆனால் தேர்தல் ஆணையம் மீது சேற்றை வாரி வழக்கறிஞர், ராகுல் போன்ற எதிர் கட்சி தலைவர் தொடர்ந்து வீசி கொண்டு வருகிறார்கள். புதிய வாக்காளர் சேர்ப்பு, தகுதியற்ற வாக்காளர் நீக்கம். தேர்தல் ஆணைய வெளிப்படையான நடவடிக்கையை விமர்சிக்க நீதிமன்றம் தடை செய்ய வேண்டும். தோல்விக்கு பின் கலகம் செய்வர்? திட்டமிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சதி கலப்பு தெரிகிறது.


Priyan Vadanad
ஆக 24, 2025 16:35

இவ்வளவு குறுகிய காலத்துக்குள் 98 சதவிகித மக்களின் ஆவணங்கள் கிடைத்துவிட்டது? கண்டிப்பாக பீகார் டெக்னோலஜியிலும், படிப்பிலும், சமூக சிந்தனையிலும் அசுர வளர்ச்சி கண்டு இந்தியாவிலே முதல் மாநிலமாக மாறிவிட்டது. ஆச்சரியமாக இல்லையா? எல்லாம் அவன் திருவிளையாடல்.


Iyer
ஆக 24, 2025 16:33

சட்டவிரோத பங்களாதேஷிகளை வாக்குப்பட்டியலில் இருந்து நீக்கியாச்சு. பிஜேபி 2/3 majority உடன் பிஹாரில் ஆட்சி அமைக்கும் அடுத்து - பிஹாரைப்போலவே - மேற்கு வங்கத்திலும் - பிஜேபி 2/3 பெரும்பான்மை யில் ஆட்சி அமைக்கும் பாரதம் முழுதும் தாமரை மலரும்


Priyan Vadanad
ஆக 24, 2025 16:28

எந்த அளவுக்கு உண்மை என்பது யாருக்கு தெரியும்? ஜெயிக்கப்போவது தேர்தல் கமிஷனும் இப்போதைய அரசும்தான்.


Gopal
ஆக 24, 2025 18:37

நல்லா கதறுங்க சாரே


vadivelu
ஆக 24, 2025 15:52

இந்தியாவின் தலை விதி . ஒரு கூட்டம் எப்படியாவது இந்த நாட்டை நிம்மதி இல்லாமல் செய்யணும் என்று கூச்சல் போடுது. இந்துக்களை எதிப்பவர்களின் கூட்டமாகவே இருக்கு. ஆண்டவன் காப்பாற்றட்டும்.


Jack
ஆக 24, 2025 16:33

இவர்களின் வக்கீல்களும் இந்துக்கள் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை