உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் தேர்தல் படுதோல்வி எதிரொலி; ராஜ்யசபா எம்பிக்களையும் இழக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம்!

பீஹார் தேர்தல் படுதோல்வி எதிரொலி; ராஜ்யசபா எம்பிக்களையும் இழக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம்!

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தல் படுதோல்வியால், 2030ம் ஆண்டு வரை ராஜ்ய சபாவுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பிக்களை அனுப்ப முடியாது. இது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.பீஹார் தேர்தல் படுதோல்வியால் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு உள்ளேயும், லாலுவின் குடும்பத்திற்கு உள்ளேயும் கடும் பூசல்கள் எழுந்துள்ளன. குடும்ப உறுப்பினர்களின் மோதல்களில் சிக்கியுள்ள ராஷ்டிரிய ஜனதா தளமானது, தற்போது அரசியல் நெருக்கடிக்குள்ளும் சிக்கி உள்ளது. அதிக தொகுதிகளில் தோற்றதால், 2026ம் ஆண்டு ராஜ்யசபா எம்பிக்களை பெற முடியாத நிலைக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் தள்ளப்பட்டு இருக்கிறது. பீஹார் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் 16 ராஜ்யசபா எம்பிக்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு மனோஜ் ஜா, சஞ்சய் யாதவ், பையாஸ் அகமது, பிரேம்சந்த் குப்தா மற்றும் அம்ரேந்திரா தரிசிங் ஆகிய 5 எம்பிக்கள் உள்ளனர்.இவர்களில் அமரேந்திரா தரிசிங் மற்றும் பிரேம்சந்த் குப்தா ஆகியோரின் எம்பி பதவிக்காலம் அடுத்தாண்டு முடிகிறது. பையாஸ் அகமது எம்பியின் பதவிக்காலம் 2028ல் நிறைவு பெறுகிறது. எஞ்சியவர்களான மனோஜ் ஜா மற்றும் சஞ்சய் யாதவ் ஆகிய இருவரின் பதவிக்காலம் 20230ம் ஆண்டு ஏப்ரலில் முடிகிறது.பீஹாருக்கு இனி அடுத்த சட்டசபை தேர்தல் என்பது 2030ம் ஆண்டு தான். ஒரு கட்சியின் சார்பில் ராஜ்யசபா எம்பிக்கு 42 எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க வேண்டும். அப்போது தான் எம்பியாக முடியும். ஆனால், 2025ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மகாகட்பந்தன் என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் வெறும் 25 தொகுதிகளில் தான் வென்றுள்ளது. கூட்டணியில் மொத்தம் 35 எம்எல்ஏக்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர்.ஒரு எம்பிக்கு 42 எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்ற சூழலில், ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு ராஜ்ய சபா எம்பிக்கள் கிடைக்க மாட்டார்கள். எம்எல்ஏக்கள் எண்ணிக்கையே 25 என்பதால் அவர்களால் ராஜ்ய சபா எம்பிக்கு வேட்பாளர்களை நிறுத்த முடியாது.எதிர்க்கட்சிகளின் ஒட்டு மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் கூட, ராஜ்ய சபா எம்பி பதவிக்கு வேட்பாளரை நிறுத்த முடியாது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ராஜ்ய சபா எம்பிக்கள் எண்ணிக்கை உயராது. மாறாக, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ராஜ்ய சபா எம்பிக்களின் எண்ணிக்கை உயரும் சூழல் காணப்படுகிறது. பீஹார் சட்டசபை தேர்தல் தோல்வியானது, மாநிலத்தில் மட்டுமல்ல, மத்தியிலும் ராஷ்டிரிய ஜனதா தளம் மட்டும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் பெரும் சரிவை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

visu
நவ 16, 2025 21:14

சூப்பர்


பேசும் தமிழன்
நவ 16, 2025 20:48

தேச துரோக கும்பலை பீகார் மக்கள் விரட்டி அடித்து விட்டார்கள்.... எப்போது பார்த்தாலும் தேச விரோத..... தீவிரவாதிகளுக்கு ஆதரவான பேச்சு.... அதனால் வெறுத்து போய் பீகார் மக்கள் இவர்களை வெறுத்து தேர்தலில் தோல்வியை பரிசாகத் தந்து விட்டார்கள்.


N S
நவ 16, 2025 20:16

காங்கிரஸ்க்கு அதுவும் முடியாது.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை