உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் தேர்தல் முடிவு; தமிழக தலைவர்களுக்கு பாடம்!

பீஹார் தேர்தல் முடிவு; தமிழக தலைவர்களுக்கு பாடம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

ஓட்டுத்திருட்டு புகார்களை மட்டுமே சொல்லி மக்களது ஓட்டுக்களை பெற்று விடலாம் என்ற இண்டி கூட்டணி கட்சிகளின் திட்டத்தை பீஹார் மக்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்துள்ளனர். இது, தமிழக அரசியல் கட்சித்தலைவர்களுக்கான பாடம் என்கின்றனர், அரசியல் ஆய்வாளர்கள்.பீஹார் மாநில தேர்தல் பிரசாரத்தில், வேறு எந்த விவகாரத்தையும் விட ஓட்டுத்திருட்டு பிரசாரத்தையே இண்டி கூட்டணி கட்சிகள் அதிகம் பேசின. காங்கிரஸ் தலைவர் ராகுல், லாலு மகன் தேஜஸ்வி இருவரும் ஊர் ஊராக பேரணி சென்றனர். செல்லும் இடங்களில் எல்லாம், ஓட்டுத்திருட்டு பற்றியே பேசிப் பேசி வாக்காளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தினர்.உண்மையில் ஓட்டுத்திருட்டு என்ற ஒன்று கிடையவே கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியும் அதை அவர்கள் ஏற்கவில்லை. இறந்து போன வாக்காளர்கள், இரட்டைப்பதிவு இருக்கும் வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள் பெயர்கள் மட்டுமே வாக்காளர்கள் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் நீக்கப்பட்டனர்.இதைத்தான் ஓட்டுத்திருட்டு என்று கூப்பாடு போட்டு இண்டி கூட்டணி ஒப்பாரி வைத்தது. இதை, பீஹார் மாநில மக்கள் முற்றிலும் புறக்கணித்து விட்டனர் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.இந்த முடிவுகள், அதே போன்ற ஓட்டுத்திருட்டு பிரசார அரசியலை கையில் எடுக்கும் திமுக கூட்டணிக் கட்சிகள் கவனிக்க வேண்டிய ஒன்றாகும் என்கின்றனர், அரசியல் ஆய்வாளர்கள்.பிற மாநிலங்களில் செய்வதை போலவே, தமிழகத்திலும் வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்து விடுவார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலினும், கூட்டணி கட்சிகளும் பேசத் தொடங்கியுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.அபாண்டமாக பேசியவர்களுக்கு பீஹார் மாநில வாக்காளர்கள் அளித்திருக்கும் முடிவு, நிச்சயம் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் தான் என்கின்றனர், அரசியல் பிரமுகர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Duruvesan, தர்மபுரி பாட்டாளி
நவ 14, 2025 19:38

பாஸ் அதெல்லாம் சும்மா , நம்ம விடியல் சார் அங்க போனாரு , இவனுங்க அங்க வாட்ஸாப்ப் ல நம்ம தலையும் அவங்க அடிமைகளும் பீஹாரிய திட்டியதை பரப்பி இவங்க கூட்டத்துக்கு உங்க ஓட்டானு கேட்டானுங்க ? அப்பால விடியலின் நண்பர் கிஷோர் மூலம் வோட்டு பிரிச்சி இண்டி கூட்டணியை தோற்க அடிச்சாங்க ,நல்லா பாருங்க கிஷோர் கட்சி பேற்ற ஓட்டுக்கள் தான் வெற்றி வித்தியாசம் 100 தொகுதிக்கு மேல்


N S
நவ 14, 2025 18:25

பீஹாரில் மற்ற மதத்தை சார்ந்தவர்களும் விழித்து கொண்டு விட்டார்கள். தமிழகம் "பிரியாணிக்கு" விலை போகலாம். வெளி நாட்டு ஊடுருவல்களும் கவலை அளிக்கின்றன.


என்றும் இந்தியன்
நவ 14, 2025 17:01

பீஹார் தேர்தல் முடிவு தமிழக தலைவர்களுக்குத்தான் பாடம்.


என்றும் இந்தியன்
நவ 14, 2025 16:37

பீஹார் தேர்தல் முடிவு தமிழக தலைவர்களுக்கு பாடம் - இல்லவே இல்லை. டாஸ்மாக்கினாட்டு மக்களுக்குதான் இந்த பாடம். "படிப்பறிவில்லாமல் கூட இருக்கலாம் படிப்பறிவிருந்தும் செயல்களின் உண்மைத்தன்மை அறியும் அறிவில்லாமல் டாஸ்மாக்கினாடு மக்களைப்போல இருக்காதே" என்பது தான் இந்த பாடம்


Raman
நவ 14, 2025 19:37

Brilliant


MARUTHU PANDIAR
நவ 14, 2025 20:00

மற்றும் கம்மல், கொலுசு, ஆரத்தி தட்டில் பணம், அண்டா -குண்டா, எல்லாம் வீட்டு ஆம்பளைங்க செலவு செஞ்ச டாஸ்மாக் பணத்திலிருந்து.


பேசும் தமிழன்
நவ 14, 2025 20:17

இதை தான் நம் கையை கொண்டு நம் கண்ணை குத்துவது என்று சொல்வார்கள்..... நமது பணத்தை டாஸ்மாக் மூலம் எடுத்து... அதே பணத்தை நமக்கு கொடுப்பது போல் சீன் போடுவது என்று கூறுவார்கள்.


R SRINIVASAN
நவ 14, 2025 16:26

ஸ்டாலின் அவர்களே, வரும் தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி உண்டா?


vbs manian
நவ 14, 2025 15:20

படு தோல்வியுற்ற காங்கிரஸ் ஏதன் மேல் பழி போடும். மின்னணு வாக்கு இயந்திரம் இல்லை SIR .


JAYACHANDRAN RAMAKRISHNAN
நவ 14, 2025 15:12

திருட்டு திருடன் பொய் போன்ற வார்த்தைகளை உபயோகித்தால் தோல்வி நிச்சயம். 500 வாக்குறுதி 1000 வாக்குறுதிகள் இனி மக்களிடையே எடுபடாது. ஆட்சிக்கு வந்த பின்னர் தனது இஷ்டத்துக்கும் தான் நினைப்பதையே செயல் படுத்த வேண்டும் என்று நினைத்தால் இனி தோல்வி நிச்சயம். மதக் கலவரங்களை ஆட்சியாளர்கள் கட்டுபடுத்த வேண்டுமே தவிர மதச்சார்பின்மை என்று சொல்லி கொண்டு இரண்டு மதத்துக்கு ஆதரவாக நடப்பதை மக்கள் புரிந்து கொண்டு உள்ளார்கள் என்பதை புரிந்து கொண்டு உண்மையாக ஆட்சி செய்ய வேண்டும். அரசின் திட்டங்கள் செயல் படுத்துவதில் நிபுணத்துவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். தினமும் படித்து கற்றுக் கொண்டு இருக்க வேண்டும். தமிழ் தமிழர்கள் என்று சொல்லி கொண்டு இருந்தால் மட்டுமே போதாது உண்மையாக அனைத்து தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனைவரையும் சரி சமமாக நடத்தி உண்மையான சமூக நீதி நிலை நாட்ட வேண்டும். மேயர் பதவி என்பதும் பஞ்சாயத்து தலைவர் பதவிகள் என்பது மிகவும் கண்ணியமான பதவிகள். இந்த பதவிகளுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு சாதி மதம் தெரிந்தவன் தெரியாதவன் என்று பார்க்காமல் நல்லவர்களுக்கு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதையை கவுன்சிலர்கள் தர வைக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்த்து கொண்டு ஊடகங்களில் தினமும் வரும் செய்திகளை பார்த்து தனக்கு தானே தம்பட்டம் அடித்து கொள்ளவதை நிறுத்தி விட்டு மத்திய அரசுடன் ஆக்க பூர்வமாக இணைந்து மாநில மக்களுக்கு மத்திய அரசின் சலுகைகள் முறையாக கிடைக்க செய்ய வேண்டும். கடைசியாக ஒன்று தேர்தலில் தோற்றால் நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாக்கு என்பது போல வாக்கு இயந்திரம் மீதும் தேர்தல் கமிஷன் மீதும் பழி சுமத்தாமல் சுய சோதனை செய்து தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். பயங்கரவாதம் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தாமல் காவல் துறையை முடுக்கி விட்டு பார்த்து கொள்ள வேண்டும்.


Barakat Ali
நவ 14, 2025 15:05

திமுக போன்ற ஒரு கட்சி பீகாரில் அரசியலே நடத்த முடியாது ..... தமிழர்களை விட, திராவிடர்களை விட நன்கு சிந்தித்து வாக்களிப்பவர்கள்தான் பீகாரிகள் ..........


SIVA
நவ 14, 2025 14:40

2001 சட்டசபை தேர்தல் தீயமூக ஆட்சிக்கு பின் ஜெயித்த தொகுதி 31. 2011 சட்டசபை தேர்தல் தீயமூக ஆட்சிக்கு பின் ஜெயித்த தொகுதி 23, இதே கணக்கு படி பார்த்தல் 2026 சட்டசபை தேர்தல் தீயமூக ஆட்சிக்கு பின் ஜெயிக்க போகும் தொகுதி 15, தீயமூக கட்சி ஆரம்பித்தபோது ஜெயித்த தொகுதி 15 . வாழ்க்கை ஒரு வட்டம் கடவுள் இருக்கான் குமாரு ....


MARUTHU PANDIAR
நவ 14, 2025 14:18

தமிழனை பீகாரியைப் போல் ஏமாற்றி வெல்ல முடியாது. தமிழன் வெற்றி பெற பிறந்தவன். அவனை வாக்காளர் அட்டை சீர் திருத்தம் என்ற ஆயுதத்தால் வீழ்த்த முடியாது. தமிழனை அழிக்க சதி திட்டம் நடக்கிறது. அதை இந்த இயக்கம் தவிடு பொடியாக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை