உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பலாத்காரம் செய்ய முயற்சி; டாக்டருக்கு நர்ஸ் அதிரடி ஆபரேஷன்

பலாத்காரம் செய்ய முயற்சி; டாக்டருக்கு நர்ஸ் அதிரடி ஆபரேஷன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் உட்பட மூன்று பேர், செவிலியரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள முஸ்ரிகரராரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கங்காபூரில், ஆர்.பி.எஸ்., ஹெல்த் கேர் சென்டர் என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. கடந்த 11ம் தேதி இரவு, அங்கு பணிபுரியும் செவிலியர், வீட்டுக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மருத்துவமனை நிர்வாகியும், டாக்டருமான சஞ்சய் குமார் மற்றும் அவரது நண்பர்கள் இருவர், செவிலியரை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றனர். சுதாரித்த செவிலியர், டாக்டர் சஞ்சய் குமாரின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்து அங்கிருந்து தப்பித்தார். இது குறித்து, மொபைல் போனில் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதன்படி மருத்துவமனைக்கு விரைந்த போலீசார், டாக்டர் சஞ்சய் குமார் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை கைது செய்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது: செவிலியரை பலாத்காரம் செய்வதற்கு முன், டாக்டர் சஞ்சய் குமார் உட்பட மூன்று பேர் மருத்துவமனையின் கேட்டை உள்பக்கமாக பூட்டியுள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமராக்களையும் அவர்கள் அணைத்து விட்டனர். சஞ்சய் குமார் உட்பட மூன்று பேரும் குடி போதையில் இருந்துள்ளனர்.சம்பவ இடத்தில் இருந்து மதுபானம், செவிலியர் பயன்படுத்திய பிளேடு, ரத்தக்கறை படிந்த ஆடைகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளோம். பீஹாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், அவர்களுக்கு எங்கிருந்து மது வந்தது என்பது குறித்தும் விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Anand
செப் 14, 2024 12:15

பொருள் கிடைத்ததா ?


M Ramachandran
செப் 14, 2024 11:01

பரவபாயில்லை அந்த டாக்டர்க்கு இலவசமாக குடும்ப கட்டு பாடு.


M Ramachandran
செப் 14, 2024 10:59

இந்த கர்மம் பிடிச்சவங்களெல்லாம் டாக்டருக்கு எதுக்கு படிக்கணும். மாட்டு டாக்டராகிய இன பெருக்கம் செய்யலாம். இவன்களை நம்பி பொம்மனாட்டிகள் வைத்தியத்திற்கு எப்படி போவார்கள்.


நிக்கோல்தாம்சன்
செப் 14, 2024 10:57

செம படிக்கவே சந்தோஷமா இருக்கு


venkatan
செப் 14, 2024 10:52

இந்த மாதிரியான நேரங்களில் இப்படிப்பட்ட நபர்களை தரப்பட்டு பயிற்சியும் தரவேண்டும்.


Barakat Ali
செப் 14, 2024 09:32

பீகார் ஆண்களிடம் மட்டுமல்ல ..... பெண்களிடம் கூட வம்பு வெச்சுக்காதீங்க ......


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 14, 2024 08:54

ஆயுதங்களே இல்லாமலும் சில சமயம் தப்பிக்கலாம். நுனி மூக்கில் ஒரு குத்து அல்லது விழியில் ஒரு குத்து அல்லது தொண்டைப்பகுதியில் வலுவான ஒரு குத்து பெரும்பாலும் எவரையும் நிலைகுலைய செய்துவிடும். பெண்களுக்கு இதுபோன்ற தற்காப்பு முறைகளை பள்ளி, கல்லூரிகளில் சொல்லிக்கொடுக்க வேண்டும். பெண்கள் தாங்கள் அணியும் உடையில் கண்ணியம் காக்க வேண்டும். ஆண் மாணவர்களுக்கு பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.


Sudha
செப் 14, 2024 08:38

மது கிடைக்க வழி செய்த பீஹார் முதல்வர் பதவி விலகுவாரா?


Shekar
செப் 14, 2024 10:13

அதுதானே, அதெப்படி அங்கே கள்ள சாராயம் விற்கலாம், நம்ம ஜாபர் அண்ணனை கூப்பிட்டு சத்துமாவு கம்பனிதானே நடத்த சொல்லியிருக்கணும்.


chennai sivakumar
செப் 14, 2024 08:28

நேராக சரி


Nandakumar Naidu.
செப் 14, 2024 08:01

செவிலியர்களுக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும். இந்தியாவில் உள்ள எல்லா பெண்களும் இவ்வாறு பலாத்கரத்திற்கு எதிராக தைரியமாக போராட வேண்டும். தேவைப்பட்டால் பலாத்காரம் செய்ய முயற்சிப்பவர்களை கொலை செய்யவும் வேண்டும்.


சமீபத்திய செய்தி