உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; புள்ளி விவரம் வெளியிட்டது தேர்தல் ஆணையம்

பீஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; புள்ளி விவரம் வெளியிட்டது தேர்தல் ஆணையம்

புதுடில்லி: பீஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பீஹார் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர்கள் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி நடத்தி வருகிறது. அதன் பணிகள் அனைத்தும் இன்றுடன் நிறைவு பெற்றது.இந் நிலையில், பீஹாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்த புள்ளி விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதில் உள்ள விவரங்கள் வருமாறு; 65.2 லட்சம் வாக்காளர்களில் 22 லட்சம் பேர் இறந்து விட்டனர். 35 லட்சம் வாக்காளர்கள் பீஹாரை விட்டு நிரந்தரமாக இடம்பெயர்ந்து உள்ளனர்.7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். 1.2 லட்சம் பேர் இன்னமும் தங்களது படிவங்களை சமர்ப்பிக்கவில்லை.99.8 சதவீதம் வாக்காளர்கள் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டு உள்ளனர். 7.9 கோடி வாக்காளர்களில் 7.23 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல்மயம் ஆக்கப்பட்டு உள்ளன. அவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். வரைவு வாக்காளர்கள் பட்டியல் ஆக.1ல் வெளியிடப்படும். ஆக.1 முதல் செப்.1 வரை அடுத்தக்கட்டத்தின் போது பரிந்துரைக்கப்பட்ட படிவங்களை நிரப்பிய பிறகும், பெயர்கள் விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கலாம். தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவது தொடர்பாக கட்சிகள் தங்களின் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஜூலை 25, 2025 22:51

அப்ப இது வரை பீகாரில் ஜெயித்தது?


தாமரை மலர்கிறது
ஜூலை 25, 2025 22:49

அரைக்கோடி கள்ளஓட்டுபோட்டு ஜெயிக்க காங்கிரஸ் விரும்புகிறது. பாதிபேர் இறந்து விட்டார்கள். மீதி பேர் தென் இந்தியாவிற்கு வந்துவிட்டார்கள். மூன்று கோடி வடஇந்தியர்கள் தமிழகத்தில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஒட்டு உரிமை கொடுத்தால், நயினார் தான் முதல்வர்.


Arjun
ஜூலை 25, 2025 22:43

எந்த நல்லதிட்டங்கள் வந்தாலும் எதிர்ப்பது தான் எதிர்கட்சிகளின் வேலை அது பற்றி ஆலோசனை செய்வது இல்லை. கள்ள ஓட்டை வைத்து வெற்றி பெறுவது இனி நடக்காது அதனால்தான் இந்த கூச்சல்.


K.Uthirapathi
ஜூலை 25, 2025 22:33

நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் பகுதிகளில் உள்ள: கனரக வாகன ஓட்டுநர்கள், கோழி பண்ணைகளில் வேலை பார்ப்பவர்களை சோதனை செய்தால், சுமார் 20 இலட்சம் அல்லது அதற்கு மேலான பங்ளாதேசிகள் சிக்குவார்கள். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தத்தி உடனே ஒப்பாரி வைக்க கூடும்.


M S RAGHUNATHAN
ஜூலை 25, 2025 21:09

இந்த சோரம் போன எதிர்க்கட்சிகள் ஒரு இந்திய குடிமகனுடைய வாக்குரிமை கூட பறிக்கப் படக்கூடாது என்று கூச்சல் இடுகின்றன. அப்படியானால் லக்ஷ கணக்கான குடியுரிமை இல்லாத பங்களாதேசிகளும், ரோஹிங்கியா முஸ்லிம்களும் வாக்கு செலுத்தலாமா ஆதார் அட்டையை வைத்து. இதற்கு அறிவுஜீவி ராகுல் மற்றும் அவருடைய அறிவார்ந்த தோழர்களும் பதில் சொல்வார்களா ? SIR உடனடியாக அமல்படுத்தப் படவேண்டிய திட்டம்.


Iyer
ஜூலை 25, 2025 21:00

 Ste[ 1: பங்களாதேஷிகள் மேற்குவங்கம் மூலமாக பாரதத்தில் நுழைகின்றனர்.  Step 2: உடனே அவர்களுக்கு மம்தா ஆதார் வழங்குகிறார்.  Step 3: பிறகு அவர்களுக்கு - பிஜேபி அல்லாத மாநிலங்களில் voter card வழங்கப்படுகிறது.  step 2 & step 3 வில் - மேற்குவங்க மந்திரிகளும மற்ற அதிகாரிகளும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.  Step 4: ஆதாரும் - வோட்டர்க்கார்டும் - பெற்ற பிறகு பங்களாதேஷிகள் - பாரதத்தின் எந்த இடத்திலும் வேலை கிடைக்கிறதோ அங்கு வேலை செய்கிறார்கள்.  Step 5: votercard எடுத்த இடத்தில எப்போது தேர்தல் நடக்கிறதோ - அப்போது பங்களாதேஷிகள் தவறாமல் வந்து கள்ள வோட்டு இடுகின்றனர்.  அதனால் ஒவ்வொரு 5 வருடமும் தேர்தலுக்கு முன் SIR தீவிரமாக செயல்படுத்துவது அவசியம்.


Mohanakrishnan
ஜூலை 25, 2025 20:51

திருட்டு மாடலுக்கு எங்கு எரிகிறதோ தண்ணி ஊற்றவும்


Sivagiri
ஜூலை 25, 2025 20:46

இப்போதெல்லாம் சிம்கார்ட் வாங்கணும்னா , ஆதார் கைரேகை - கிடையாது , கண் விழி பதிவுதான் , செல்போனிலேயே , கண் சிமிட்ட சொல்லி மூணு விநாடியிலேயே , செக் பண்ணிடறாங்க . . . அதே போல வோட்டர் ஐடி , ஆதார் ஐடி , ரேஷன் கார்டு , பான்கார்ட் பாஸ்போர்ட் , அனைத்தையும் ஒருங்கிணைத்து , விட்டால் தேவலை . . கண்ணை சிமிட்டினாலே போதும் . . .


Iyer
ஜூலை 25, 2025 20:45

"""35 லட்சம் வாக்காளர்கள் பீஹாரை விட்டு நிரந்தரமாக இடம்பெயர்ந்து உள்ளனர்.""" இந்த 35 லக்ஷத்திலும் பெரும்பகுதி பங்களாதேஷிகளும், ரோஹிண்யாக்களும் இருப்பார்கள்.


Iyer
ஜூலை 25, 2025 20:43

1.2 லக்ஷம் இன்னும் தங்கள் படிவங்களை சமர்ப்பிக்கவில்லை. - இதில் 90% பங்களாதேஷிகளும், ரொஹிங்கியாக்களும் இருக்க வாய்ப்பு உண்டு.


முக்கிய வீடியோ