உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரத்தை இயக்கிய பில்கேட்ஸ்

பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரத்தை இயக்கிய பில்கேட்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சத்ரபதி சம்பாஜிநகர்: மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரை சேர்ந்த யோகேஷ், வயல்வெளிகளில் பூச்சி மருந்து தெளிக்கும் நவீன இயந்திரத்தை உருவாக்கி உள்ளார்.விவசாயிகளின் பணியை சுலபமாக்கும் விதமாக, உருவாக்கப்பட்டுள்ள இதை, இந்தியா வந்துள்ள அமெரிக்க தொழிலதிபர் பில்கேட்ஸ், டில்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி மைய வயல்வெளியில் மருந்து தெளித்து சோதித்துப் பார்த்தார்.

மஹாராஷ்டிரா முதல்வருடன் சந்திப்பு

மஹாராஷ்டிராவின் மும்பை வந்த தொழிலதிபர் பில்கேட்ஸ், மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிசை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, சுகாதாரம், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு துறைகளில் ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்ததாக மாநில அரசு செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ