உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பறவைக்காய்ச்சல் பாதிப்பு: நாக்பூரில் 3 புலிகள், சிறுத்தை உயிரிழப்பு

பறவைக்காய்ச்சல் பாதிப்பு: நாக்பூரில் 3 புலிகள், சிறுத்தை உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: நாக்பூர் கோரேவாடா மீட்பு மையத்தில் மூன்று புலிகள் மற்றும் ஒரு சிறுத்தைப்புலி ஆகியவை பறவை காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன.மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கோரேவாடா மீட்பு மையம் உள்ளது. இந்த மையத்தில் கடந்த வாரம் டிச.20 ஆம் தேதி ஒரு புலியும், டிச.23ம் இரண்டு புலிகளும் தேதியும் உயிரிழந்துவிட்டன.உயிரிழப்பு குறித்து கோரேவாடா திட்டப் பிரிவு மேலாளர் பகவத் கூறியதாவது:உயிரிந்த அந்த புலிகளின் மாதிரிகள், போபாலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு, ஜன.,1ம் தேதி இந்த விலங்குகள் பறவைக்காய்ச்சல் எச்1என்1 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.அதேவேளையில், 26 சிறுத்தைகள் மற்றும் 12 புலிகளும் பரிசோதனை செய்யப்பட்டது. அவை நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காட்டு மாமிச உண்ணிகளில் பறவைக் காய்ச்சல் பொதுவாக பாதிக்கப்பட்ட இரை அல்லது பச்சை இறைச்சியின் நுகர்வுடன் தொடர்புடையது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.இவ்வாறு பகவத் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஜன 05, 2025 18:32

என்னது? பறவைக்காய்ச்சலா? புலிக்காய்ச்சல்னு சொல்லுங்க. இல்லே சிறுத்தைக்.காய்ச்சல்னு சொல்லுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை