உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பிறப்பிட அட்டை மசோதா கேரள சட்டசபையில் அறிமுகம்

 பிறப்பிட அட்டை மசோதா கேரள சட்டசபையில் அறிமுகம்

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் பிறப்பிட அட்டை மசோதாவை, வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன் நேற்று அறிமுகம் செய்தார். அவர் கூறுகையில், ''குடியுரிமை, பிறப்பிடம் ஆகியவை வெவ்வேறு கருத்துகள். அரசியலமைப்பின் கீழ் குடியுரிமை உறுதி செய்யப் படுவது போல, ஒருவரை முறைப்படி கேரளத்தவர் என அங்கீகரிக்கும் சட்டப்பூர்வ ஆவண மாக இந்த மசோதா இருக்கும். ''மத்திய பா.ஜ., அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருதலைபட்சமாக அமல்படுத்தியதே, இந்த மசோதாவை கொண்டு வருவதற்கு காரணம்,'' என்றார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ., 'இது ஆபத்தான பிரிவினைவாத அரசியல்' என விமர்சித்துள்ளது. ''அடையாளத்தை நிரூபிக்க மக்கள் சிரமப்படுவதை தவிர்க்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது,'' என, முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.

நோக்கம்

 பிறப்பிட அட்டை மசோதா சட்டமானால், கேரளாவைச் சேர்ந்தவர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக, 'கேரளத்தவர்' என அறிவிக்கலாம்  கல்வி அல்லது வேலைவாய்ப்பு தேவைகளுக்காக இந்த அட்டையை பயன்படுத்தலாம்  கேரள அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் உண்மையான பயனாளிகளை சென்றடைவதை உறுதிசெய்ய இந்த அட்டை உதவும்  குறிப்பாக, வெளி நாடுகளுக்கு புலம்பெயர்ந்த கேரளத்தவர்கள் மற்றும் உள்நாட்டிற்குள் இடம் பெயர்ந்தவர்களை கண்டறிய பயன்படும்  மலையாள மொழி மற்றும் கலாசார அடையாளத்தை ஒரு சட்டப்பூர்வ ஆவணமாக மாற்றுவதன் மூலம், கேரளாவின் பெருமிதத்தை நிலைநாட்டுவதும் இந்த மசோதாவின் முக்கிய நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை