வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்ல அருமையான வாய்ப்பு
புதுடில்லி: இந்திய தர நிர்ணய அமைப்பு ( பி.ஐ.எஸ்., ) ஆலோசகர் (Consultant) பதவிகளுக்கான 97 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 27.பி.ஐ.எஸ்., என்பது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்களில் தரத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிறுவனத்தில் இருக்கும் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆலோசகர் (Consultant)- 97.கல்வித் தகுதி என்ன?
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்லூரி, மருத்துவமனைகளில் ஆராய்ச்சி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.பணியிடம் எங்கே?
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் டில்லியில் பணியமர்த்தப்படுவார்கள். பணி நியமன காலம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.விண்ணப்பிப்பது எப்படி?
https://www.bis.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 27.தேர்வு செய்வது எப்படி?
எழுத்து தேர்வு, தொழில்நுட்ப அறிவு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நல்ல அருமையான வாய்ப்பு