மேலும் செய்திகள்
கலபுரகியில் இன்று அமைச்சரவை கூட்டம்
17-Sep-2024
ஹூப்பள்ளி: ''கர்நாடகாவை மத்திய பா.ஜ., அரசு வஞ்சிக்கிறது. அக்கட்சி எம்.பி.,க்கள், மாநிலத்துக்கு துரோகம் செய்கின்றனர்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:கர்நாடகாவுக்கு வரி பங்கீட்டில் அநீதி இழைத்த மத்திய அரசுக்கு எதிராக, மாநில மக்கள் குரல் எழுப்ப வேண்டும். பிரஹலாத் ஜோஷி உட்பட பா.ஜ., - எம்.பி.,க்கள் கர்நாடக மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.உத்தர பிரதேசத்துக்கு 31,962 கோடி ரூபாய் வழங்கிய மத்திய அரசு, கர்நாடகாவுக்கு 6,498 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.ஹூப்பள்ளி கலவர வழக்கை வாபஸ் பெறும் முடிவை, அமைச்சரவை துணை குழு தலைவரும், உள்துறை அமைச்சருமான பரமேஸ்வர், அமைச்சரவையில் சமர்ப்பித்தார். கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்ததால், அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது. இதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.நீதிமன்றம் ஒப்புக் கொண்டால் தான், வழக்கை வாபஸ் பெற முடியும். ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை, பா.ஜ., வாபஸ் பெறவில்லையா.நடப்பாண்டு மைசூரு தசரா ஆடம்பரமாக கொண்டாடப்பட்டதால், உலகளவில் அதிகளவில் மக்கள் வருகை தந்தனர். சிறப்பாக பணியாற்றியோருக்கு வாழ்த்துகள்.இவ்வாறு அவர் கூறினார்.
17-Sep-2024