உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., - எம்.எல்.சி., ரவி கைது விவகாரம் முதல்வர் தலையிடும்படி கவர்னர் கடிதம்..

பா.ஜ., - எம்.எல்.சி., ரவி கைது விவகாரம் முதல்வர் தலையிடும்படி கவர்னர் கடிதம்..

பெங்களூரு: 'பா.ஜ., - எம்.எல்.சி., ரவி கைது விவகாரத்தில், முதல்வர் சித்தராமையா தலையிட வேண்டும்' என, அவருக்கு கவர்னர் கடிதம் எழுதியுள்ளார்.பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் கடந்த மாதம் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை சட்டசபை குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்தது. கடைசி நாளில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.லட்சுமி அளித்த புகாரில் ரவி கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்தபோது அவரது தலையில் காயம் ஏற்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார். தன்னை லட்சுமியின் ஆதரவாளர்கள் தாக்கியதாக ரவி போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மீது போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.கடந்த மாதம் ரவி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, அமைச்சர் லட்சுமி, போலீஸ் அதிகாரிகள் மீது புகார் கொடுத்தனர்.

அட்டூழியம்

இதையடுத்து, முதல்வர் சித்தராமையாவுக்கு கடந்த 31ம் தேதி கவர்னர் கடித எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:பெலகாவியில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கடைசி நாளில் நடந்த சம்பவம் தொடர்பாக எம்.எல்.சி., ரவி மற்றும் அவரது சகாக்கள் என்னை சந்தித்து மனு அளித்தனர்.இந்த வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு, இந்த வழக்கில் முதல்வர் தலையிட வேண்டும். இந்த விவகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி விவகாரம் என்பதால், தேவையான நடவடிக்கை எடுக்க முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.ரவிக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்த கடிதத்திற்கு முதல்வர் அலுவலகம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பாதுகாப்பு அளியுங்கள்!

தன்னிடம் ரவி அளித்த மனுவில் கூறியிருப்பதாக கடிதத்தில் கவர்னர் கூறியிருப்பது:தன் மனுவில் ரவி, 'பெலகாவி போலீஸ் கமிஷனர், எஸ்.பி., சக போலீஸ் அதிகாரிகள், என்னை கடத்திச் சென்று, கரும்புத் தோட்டம், விவசாய நிலம், கானாபுரா, கிட்டூர், லோகாபுரா, சங்கேஸ்வர் மற்றும் பல இடங்களுக்கு அலைக்கழித்தனர். இரவு முழுவதும் 400 கி.மீ., துாரம் என்னை சுற்றவைத்தனர். போலீஸ் காவலில் எனக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. மனரீதியாக, உடல் ரீதியாக போலீஸ் எனக்கு தொல்லை கொடுத்தனர்.'என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நான் அளித்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போலீஸ் துறையின் மன்னிக்க முடியாத அட்டூழியம். இந்த வழக்கில் குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, உயிருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை