உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., - எம்.எல்.சி., மகன் வீட்டில் சி.ஐ.டி., சோதனை

பா.ஜ., - எம்.எல்.சி., மகன் வீட்டில் சி.ஐ.டி., சோதனை

கலபுரகி: பா.ஜ., ஆட்சியில் போவி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டு புகார் தொடர்பாக, பா.ஜ., - எம்.எல்.சி., சுனில் வல்யாபுரே மகன் வீட்டில், சி.ஐ.டி., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.கர்நாடகா அரசின் சமூக நலத்துறைக்கு உட்பட்டது, போவி மேம்பாட்டு ஆணையம். பா.ஜ., ஆட்சியின்போது ஆணையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக, காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதுகுறித்து சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.இந்த முறைகேட்டில் பா.ஜ., - எம்.எல்.சி., சுனில் வல்யாபுரே மகன் வினய்க்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர் 12 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில் நேற்று காலையில், கலபுரகி சந்தோஷ் காலனியில் உள்ள, வினய் வீட்டில் சி.ஐ.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர்; சில ஆவணங்களை கைப்பற்றினர். விசாரணைக்கு ஆஜராகுமாறு, வினய்க்கு நோட்டீஸ் அனுப்பப்படலாம் என்று சொல்லப்படுகிறது.முடா, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்குகளை திசை திருப்ப, சி.ஐ.டி., வாயிலாக மாநில சித்தராமையா அரசு முயற்சி செய்வதாக, பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை