உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோனியா மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கணும்: பா.ஜ., எம்.பி.க்கள் 40 பேர் வலியுறுத்தல்

சோனியா மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கணும்: பா.ஜ., எம்.பி.க்கள் 40 பேர் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜனாதிபதியை அவதூறாக பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க துணை ஜனாதிபதியிடம் பா.ஜ., எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர். பார்லி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கடந்த (ஜன.) 31ம் தேதி கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, உரையின் இறுதிப்பகுதியை வாசிக்கும் போது ஜனாதிபதி சோர்வு அடைந்துவிட்டார், அவர் பாவம் என்று கூறினார். சோனியாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடி, மூத்த பா.ஜ., தலைவர்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஜனாதிபதி மாளிகையும் சோனியா பேச்சை கண்டித்து, அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் ஜனாதிபதியை பாவம் என்று கூறிய சோனியா மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க கோரி உள்ளனர். இது தொடர்பாக பா.ஜ.,வை சேர்ந்த 40 எம்.பி.,க்கள் அடங்கிய குழுவினர், துணை ஜனாதிபதியும், ராஜ்ய சபா தலைவருமான ஜக்தீப் தன்கரை சந்தித்தனர். அவரிடம் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் ஒன்றை அளித்துள்ளனர். உயரிய பதவியின் கண்ணியத்தை குறைக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதிக்கு எதிராக இழிவான மற்றும் அவதூறான வார்த்தைகளை சோனியா பயன்படுத்தி இருப்பதாக அவர்கள் அதில் குறிப்பிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

pmsamy
பிப் 04, 2025 08:59

பாஜக எம்பிக்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும்


anantharaman
பிப் 04, 2025 08:20

மனுவுடன் நிறுத்தாமல் பாஜக மேலிடத்துக்கு பதவி விலகுவார் என அச்சுறுத்தலும் வேண்டும். இல்லையெனில் முதுகெலும்பற்ற தலைமை கண்டு கொள்ளாது.


Kasimani Baskaran
பிப் 04, 2025 07:29

நேரு குடும்ப மருமகள் என்பதால் மன்மோகன் சிங், பிரதிபா போன்றோரை இவர் மதித்ததே கிடையாது. அதே பாணியில் ஜனாதிபதி மீது அனுதாபம் காட்டுவது போல வெறுப்பை உமிழ்ந்து இருக்கிறார். கண்டனத்துக்குரிய செயல்.


J.V. Iyer
பிப் 04, 2025 04:27

வெளிநாட்டவர். இத்தாலியர். இவர் எப்படி இந்தியாவில்... இவருக்கும் கொத்தடிமைகள்.. கான்-கிரேஸ் என்றால் ஜார்ஜ் சோரஸ் அடிமைகள்தானே?


Krish
பிப் 03, 2025 23:46

நுணலும் தன் வாயால் கெடும்


சின்ன சுடலை ஈர வெங்காயம்
பிப் 03, 2025 21:19

ஒன்றும் நடக்காது.


Anbuselvan
பிப் 03, 2025 21:09

உயர் பதவியில் போக போக நாவடக்கம் மிகவும் முக்கியம். இப்போது யார் பாவம்?


ஆரூர் ரங்
பிப் 03, 2025 19:54

பார்லிமெண்டில் தூங்கிய, கண்ணாடித்த, கட்டிப்பிடித்த ராவுல் மீதும் ?


ஆரூர் ரங்
பிப் 03, 2025 19:54

பார்லிமெண்டில் தூங்கிய, கண்ணாடித்த, கட்டிப்பிடித்த ராவுல் மீதும் ?


சமீபத்திய செய்தி