உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "தவறுகளில் இருந்து பா.ஜ., தப்பிக்க முடியாது: கார்கே எச்சரிக்கை

"தவறுகளில் இருந்து பா.ஜ., தப்பிக்க முடியாது: கார்கே எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வினாத்தாள் கசிவு முறைகேடுகள் அனைத்தும், உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ., தனது தவறுகளில் இருந்து தப்பிக்க முடியாது' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், மல்லிகார்ஜூன கார்கே கூறியிருப்பதாவது: இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள்கள் எதுவும் கசியவில்லை என மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்களை நம்ப வைக்கும் நோக்கில், பொய் சொல்லப்படுகிறது. அரசின் இந்த முயற்சியால் அவர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டுமே முறைகேடுகள் நடந்துள்ளது என மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.

முறைகேடுகள்

கல்வி மாபியாவை ஊக்குவித்து ஒட்டுமொத்த கல்விமுறையையும் பா.ஜ., கையகப்படுத்தியுள்ளது. தேர்வுகளில் வினாத்தாள்களை கசியவிடுவதன் மூலம் பா.ஜ., அரசு, நமது கல்வி முறையை அழிக்க குறியாக உள்ளது. இளநிலை நீட் தேர்வு, மீண்டும் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும். வினாத்தாள் கசிவு முறைகேடுகள் அனைத்தும், உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பா.ஜ., தனது தவறுகளில் இருந்து தப்பிக்க முடியாது. இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Anbuselvan
ஜூலை 06, 2024 22:38

சீக்கிரம் விரட்டுங்கப்பா இந்த கொசுவை. காதில் வந்து ங்கோய்யுன்னு சத்தம் போட்டுட்டே இருக்கு.


vukram
ஜூலை 06, 2024 21:52

பாவம் வயசு ஆச்சி உளறல்


அசோகன்
ஜூலை 06, 2024 21:03

ஐயோ இந்த கொத்தடிமைகள் கூவலை தாங்க முடியலை..... மழை பெய்யவில்லைனா கூட அதுக்கு நீட் தான் காரணம் என கத்துவானுங்க ........ உச்சநீதிமன்றம் பக்கம் மட்டும் தலை வைத்து கூட படுக்கமாட்டாங்கள்


R SRINIVASAN
ஜூலை 06, 2024 20:58

கள்ளக்குறிச்சிக்கு வந்து இறந்த மக்களுக்கு ஆறுதல் சொல்ல துப்பில்லை .பிஜேபிக்கு எச்சரிக்கை விடுகிறார்.


Nagarajan S
ஜூலை 06, 2024 19:58

மத்திய அரசில் சம்பந்தப்பட்ட எந்த இலாக்காக்களில் தவறு நடந்தாலும் அதற்கு அந்த இலாகாவின் அமைச்சரும் அதிகாரிகளும் தானே பொறுப்பு. எல்லாவற்றிற்கும் பிரதமரே பொறுப்பாக முடியுமா? காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் பிரதமர் மோடியை எல்லாவற்றிற்கும் குறைகூறிக்கொண்டே இருக்கவேண்டும்.


Rajasekar Jayaraman
ஜூலை 06, 2024 17:19

கூட்டத் தலைவனின் திமிர் நிறைந்த பேச்சு எதிர்க்கட்சி தலைவனை பல வழக்குகளில் ஜாமினில் உலவிகொண்டிருக்கிறது.


வாய்மையே வெல்லும்
ஜூலை 06, 2024 17:06

தைலத்தை செல்லத்துக்கு நெற்றியில் தடவ சொல்லி கொடுக்கவேணும்.


ஆரூர் ரங்
ஜூலை 06, 2024 16:46

உங்க தலைவர் ரெண்டு வருஷம் சிறைத் தண்டனை பெற்றவர்.


Kogulan
ஜூலை 06, 2024 16:45

என்னவோ பிரதமர் அந்த தவறை செய்தது போலவும், தப்பிக்கமுடியாது போலவும் கார்கே சொல்வதில் அர்த்தமேயில்லை. சம்பந்தபட்ட அதிகாரிகள் தவறு செய்திருந்தால் தப்பிக்கமுடியாது என்றுதான் உளரவேணடும்


Nagarajan D
ஜூலை 06, 2024 16:28

பிஜேபி தப்பித்திருக்கட்டும் எப்படி தப்பிப்பீங்க


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை