உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பு இல்லை கவர்னரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் புகார்

மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பு இல்லை கவர்னரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் புகார்

புதுச்சேரி:''மக்கள் பிரதிநிதிகளுக்கு புதுச்சேரியில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது'' என கவர்னரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ., 6 பேர் புகார் தெரிவித்தனர்.புதுச்சேரி பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், அங்காளன், சிவசங்கர், வெங்கடேசன் ஆகியோர் ராஜ்நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதனை நேற்ரு சந்தித்து பேசினர்.அப்போது, 'மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிக்கின்றனர். மொபைல் போனில் தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர். ஆதாரத்துடன் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அங்காளன் எம்.எல்.ஏ.,வை மிரட்டியவர் மீது 22 கிரிமினல் வழக்கு உள்ளது. அரசு ஊழியராகவும் உள்ளார். அப்படி இருந்தும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை.புகார் மீது வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்யவில்லை. சிவசங்கர் எம்.எல்.ஏ., விவகாரத்திலும் இப்படி தான் நடந்தது. போராட்டம் வெடித்த பிறகு எப்.ஆர்.ஐ., போட்டனர். மக்கள் பிரதிநிதியின் புகாருக்கே இப்படி என்றால், சாமானிய மக்களின் புகார் மீது என்ன நடவடிக்கை எடுப்பர். இப்படி மோசமாக மிரட்டப்பட்டால் மக்கள் பணிகளை எம்.எல்.ஏ.,க்கள் எப்படி செய்ய முடியும்'' என, கொந்தளித்தனர்.இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவை பெற்றுக் கொண்ட கவர்னர், இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி