உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொய்களின் கூடாரம்!

பொய்களின் கூடாரம்!

மாணவர்கள் போராடும் விவகாரத்தில் பா.ஜ.,வை விமர்சிக்க காங்கிரசுக்கு உரிமை இல்லை. பொய்களின் கூடாரமான அக்கட்சி எங்களை விமர்சிப்பதா? போராட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவு கிடைத்ததை பார்த்த பின்னரே, மாணவர்களுக்கு காங்., ஆதரவு அளித்தது. அரசியல் ஆதாயத்துக்காகவே இவ்வாறு செயல்படுகிறது. நிஷிகாந்த் துபே லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

மன்னிப்பு கேட்க வேண்டும்!

'மனதின் குரல்' நிகழ்ச்சி போல உரையாற்றாமல், 'நீட்' வினாத்தாள் கசிவு குறித்து பார்லியில் பிரதமர் மோடி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். டில்லியில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது தடியடி நடத்தியோர் மீது அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். மல்லிகார்ஜுன கார்கே தேசிய தலைவர், காங்கிரஸ்

வலுப்படுத்த உதவும்!

கடந்த 2014ல், நாடு முழுதும் 387ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, தற்போது 844 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும், கடந்த 12 ஆண்டுகளில் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. நாடு முழுதும், குறிப்பாக கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை வலுப்படுத்த இது உதவும். அனுப்ரியா படேல் மத்திய இணையமைச்சர், அப்னா தளம் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி