உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா ரூ.50 கோடி: சித்தராமையா திடுக்...!

காங்., எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா ரூ.50 கோடி: சித்தராமையா திடுக்...!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'காங்., எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா ரூ.50 கோடி தருவதாக, பா. ஜ., பேரம் பேசி உள்ளது' என கர்நாடகா முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.கர்நாடகா, மைசூரு மாவட்டத்தில், ரூ.470 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: எங்கள் அரசை எப்படியாவது கவிழ்க்க, 50 எம்.எல்.ஏ.க்களுக்கு 50 கோடி ரூபாய் வழங்குவதாக அவர்கள் (பா.ஜ.,) கூறியுள்ளனர். அவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம்? முன்னாள் முதல்வர்கள் பி.எஸ்.எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, பா.ஜ.க., மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா பணத்தை அச்சடிக்கிறார்களா?

பொய் பிரசாரம்

அதெல்லாம் லஞ்சப் பணம். அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். கடந்த முறை, அந்த பணத்தை பயன்படுத்தி, ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும், 50 கோடி ரூபாய் வழங்கினர். ஆனால் இந்த முறை அதற்கு எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் சம்மதிக்கவில்லை. அதனால்தான் எப்படியாவது இந்த அரசை அகற்ற வேண்டும் என்று பொய் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அதனால் என் மீது பொய் வழக்குகள் பதிவு செய்கின்றனர். இவ்வாறு சித்தராமையா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

BALACHANDRAN
நவ 15, 2024 08:28

நாட்டில் தேச பற்று குறைந்துவிட்டது ரொம்பவே தெரிகிறது. மனிதனுடைய அடிப்படை வசதிகள். வேலைவாய்ப்பு ஒருவனை படிக்க வைக்க எவ்வளவு தேவைப்படுகிறது நமக்குப் பிறகு வரக்கூடிய தலைமுறைக்கும் நாம் வசதிகளை செய்து தர வேண்டும் என்று கட்சி பாகுபாடு இன்றி அந்தச் திட்டங்களை வகுக்க வேண்டும்.ஒரு காலத்திலே திட்டங்கள் போடுவதற்கு சரியான நிதி இல்லாமல் கஷ்டப்பட்டது.இப்பொழுது நிதி சுமையை மக்களிடம் சேர்க்கப்பட்டது திட்டங்களுக்கான முழு பலன் மக்களை சென்றடையவில்லை என்பது நிச்சயமாக தெரிகிறது. இன்றைய அரசியல் சற்று வேதனை அளிக்கிறது


பேசும் தமிழன்
நவ 14, 2024 19:28

உங்களை பொறுத்தவரை ....50 கோடி என்பது சும்மா ஜுஜுபி....சொல்வது தான் சொல்கிறீர்கள்..... ஆளுக்கு 1000 கோடி கொடுப்பதாக சொன்னார்கள் என்று கூற வேண்டியது தானே ???


என்றும் இந்தியன்
நவ 14, 2024 17:20

அப்படியாவது முஸ்லீம் நேரு காங்கிரஸ் எம் எல் ஏ கட்சி மாறும் போது ரூ 50 கோடி கேட்டு அவனுக்கு அது கொடுக்காதபடியால் மறுபடியும் முஸ்லீம் நேரு காங்கிரசுவில் எம் எல் ஏ ஐக்கியம் ஆகிடமாட்டார்களா என்று இடஙக அப்பா ரூ 50 கோடி புரளி


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 14, 2024 14:21

இவருக்கு 50 கோடி கிடைக்க வில்லையா வருத்தம் இருக்கத்தானே செய்யும்.


நிக்கோல்தாம்சன்
நவ 14, 2024 14:08

அந்த பதினாலாம் நம்பர் சைட்டு எங்கேப்பா ?


KRISHNAN R
நவ 14, 2024 13:35

தனக்கு திருகு வலி என்றால்.. அது எல்லார்க்கும்..அனுப்பணும்


Raa
நவ 14, 2024 10:37

"ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும், 50 கோடி ரூபாய் வழங்கினர். ஆனால் இந்த முறை அதற்கு எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் சம்மதிக்கவில்லை." >>> நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர் "இந்த முறை" சம்மதிக்கவில்லையாம். அப்ப கடந்தமுறை நடந்தது என்கிறாரா முதல்வர்?


Pats, Kongunadu, Bharat, Hindustan
நவ 14, 2024 09:44

அவனுங்கள்ளாம் அவ்வளவு ஒர்த் இல்லைங்கோ.


ஆரூர் ரங்
நவ 14, 2024 09:21

உங்க கட்சிதானே கட்சித்தாவல் தடைச் சட்டத்தை கொண்டுவந்தது? அதில் என்ன ஓட்டைகள் உள்ளன? கட்சி மாறும் எம்எல்ஏ களை தகுதியிழப்பு செய்யும் அதிகாரமே உங்க கைப்பாவை சபாநாயகர் கையில் இருக்கும்போது என்ன பயம்?


Sankaran Srinivasan
நவ 14, 2024 09:05

இந்த காங்கிரஸ் MLA களுக்கு 50 பைசா கூட லாயக்கில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை