உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு - காஷ்மீர் ராஜ்யசபா தேர்தல் ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியளித்த பா.ஜ.,

ஜம்மு - காஷ்மீர் ராஜ்யசபா தேர்தல் ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியளித்த பா.ஜ.,

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், ஆளும் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களிலும், பா.ஜ., ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. ஜம்மு - காஷ்மீரில் காலியாகவுள்ள நான்கு ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடந்தது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பின் நடத்தப்பட்ட இந்த முதல் ராஜ்யசபா தேர்தலில், ஆளும் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர்களுக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. எதிர்பார்ப்பு முக்கிய எதிர்க்கட்சியான முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஆதரவு தெரிவித்திருந்தது. அதே சமயம் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக, பா.ஜ., சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஜம் மு - காஷ்மீர் சட்டசபையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 88. இதில் ஆளும் தேசிய மாநாட்டு கட்சிக்கு 41 எம்.எல். ஏ.,க்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான பா.ஜ., வுக்கு 28 எம்.எல்.ஏ.,க்க ள் இருக்கின்றனர். மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 3, காங்., 6, மார்க்சிஸ்ட் கம்யூ., அவாமி இத்தேஹத் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு தலா ஒரு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஏழு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களில் ஐந்து பேர் முதல்வர் ஒமர் அப்துல்லா அரசில் இடம் பெற்றுள்ளனர். இதனால், ஆளும் கட்சி வேட்பாளர்கள் அனைவருமே வெற்றி பெறுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரே நேரத்தில் நான்கு இடங்களுக்கும் தேர்தல் நடந்ததால், விருப்ப ஓட்டுகளின் அடிப்படையில், மூன்று இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர்கள் சவுத்ரி முகமது ரம்ஜான், சஜ்ஜத் கிச்லு, ஷம்மி ஓபராய் வென்றனர். இந்நிலையில், நான்காவது இடத்துக்கான தேர்தலில் பா.ஜ.,வின் சத்பால் சர்மா, வெற்றி பெற்றார். கட்சியின் 28 எம்.எல்.ஏ.,க்களைத் தவிர அவருக்கு கூடுதலாக, நான்கு ஓட்டுகள் கிடைத்தன. இதைத் தவிர, மூன்று ஓட்டுகள் செல்லாதவை. துரதிர்ஷ்டவசமானது கட்சி மாறி ஓட்டுஅளித்ததால், நான்காவது எம்.பி.,யையும் பெறும் வாய்ப்பை ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி இழந்தது. ''ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த மதச்சார்பற்ற கட்சிகள், எனக்கு ஆதரவு அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தன. அதை மீறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது மற்றும் வெட்கக்கேடானது. அவர்கள் எங்களின் முதுகில் குத்திவிட்டனர்,'' என, தேர்தலில் தோல்வியடைந்த தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் இம்ரான் நபி தர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி