ஜார்க்கண்டில் தே.ஜ., கூட்டணி தொகுதி பங்கீடு: 68 தொகுதிகளில் பா.ஜ., போட்டி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது.81 எம்.எல்.ஏ.,க்களை தேர்வு செய்ய ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவ.,13 மற்றும் 20 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஓரணியாக தேர்தலை சந்திக்கின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mnb0a2e2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மறுபுறம் பா.ஜ., ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ.,) ஐ.ஜ.த., லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.,) ஆகியன ஓரணியாக உள்ளன. இத்தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பா.ஜ., கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பா.ஜ., மாநில தலைவர் பாபுலால் மராண்டி, ஏ.ஜே.எஸ்.யூ., தலைவர் சுதேஷ் மஹடோ, ஜார்க்கண்ட் மாநில பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், துணை பொறுப்பாளரான அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது.இதன்படி, பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏ.ஜே.எஸ்.யூ.,10 தொகுதிகளிலும், ஐ.ஜ.த., 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி., ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. எந்த கட்சிக்கு எந்த இடம் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.