உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலுக்கு பிந்தைய வங்கி கையிருப்பு ரூ.10,107 கோடியுடன் பா.ஜ., முதலிடம்

தேர்தலுக்கு பிந்தைய வங்கி கையிருப்பு ரூ.10,107 கோடியுடன் பா.ஜ., முதலிடம்

புதுடில்லி : பா.ஜ., உட்பட ஆறு கட்சிகளின் வங்கிக் கணக்குகளில், கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன் இருந்த தொகையை விட, தேர்தல் முடிந்த பின் அதிக பணம் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்பு விபரங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்வர். அதே போல, தேர்தல் முடிந்த பின் வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்பு விபரங்களையும் தாக்கல் செய்வர். கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தெலுங்கு தேசம் உட்பட ஆறு கட்சிகளின் வங்கி இருப்பு துவக்கத்தை விட, தேர்தல் முடிந்த பின் அதிகரித்து இருந்தது தெரியவந்துள்ளது.இதுகுறித்து காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள விபரம்:தேசிய கட்சிகளான பா.ஜ., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் மற்றும் தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட 17 மாநில கட்சிகளிடம் லோக்சபா தேர்தல் அறிவிப்பின் போது, மொத்தம், 11,326 கோடி ரூபாய் வங்கி இருப்பு இருந்தது.தேர்தல் பிரசார காலத்தின்போது, இந்த கட்சிகள் மொத்தமாக, 7,416 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளன. அதில், 3,861 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். தேர்தல் முடிந்தபின் இவர்களின் வங்கி இருப்பு 14,848 கோடி ரூபாயாக இருந்தது.இதில், பா.ஜ., தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூ., லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் பஸ்வான், சிக்கிம் ஜனநாயக முன்னணி, அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய ஆறு கட்சிகள், தேர்தலுக்கு பின் அதிக நிதி கையிருப்பு வைத்திருந்தன.அதில் பா.ஜ., முதலிடம் வகித்தது. தேர்தல் அறிவிப்பின் போது பா.ஜ., வங்கி இருப்பு 5,922 கோடி ரூபாயாக இருந்தது. தேர்தல் காலத்தின் போது, 6,268 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளனர். லோக்சபா தேர்தலுக்கு, 1,738 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். தேர்தல் முடிந்த பின் வங்கி இருப்பு 10,107 கோடி ரூபாயாக இருந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

pmnr pmnr
மார் 26, 2025 18:34

இது பிஜேபி மோசடி


venugopal s
மார் 25, 2025 17:39

ஆத்தோடு போனாலும் செட்டியார் ஆதாயம் இல்லாமல் போக மாட்டார் என்பது போல் பாஜகவுக்கு நன்கொடை கொடுத்த பெரும்புள்ளிகளுக்கு கொடுத்ததை விட பலமடங்கு ஆதாயம் கிடைத்திருக்கும்!


Thirumal s S
மார் 25, 2025 12:13

கணக்கில் வந்தது இவ்வளவு வராதது? ஜனநாயகத்தை காக்க இந்த நிதியை பயன்படுத்துவார்கள்.


S.Martin Manoj
மார் 25, 2025 12:06

அமலாக்கத்துறை ரெய்டு அப்புறம் அந்த கம்பெனிகள் அல்லது தனி நபர்களிடம் தேர்தல் பத்திர வருமானம்ன்னு பீ சப்பி எகபோகமா வாழ்ந்துகிட்டு இருக்கு, பத்தாயிரம் கோடி என்பது சுத்த பொய் ஒரு லட்சம் கோடி என்பது உண்மை மீதி 90 ஆயிரம் கோடி பினாமிகளிடம்.


hasan kuthoos
மார் 25, 2025 09:52

ஓம் பணம் பணம் எம் பணம் பணம் எம்பனம் ஓம்பனம் , mla mp க்களை விலைக்கு வாங்க இப்போதே தயாராகி விட்டார்கள் ,


Mario
மார் 25, 2025 08:54

வசூல் ராஜா


Sampath Kumar
மார் 25, 2025 08:40

இதில் என்ன பெருமை வேண்டி கிடக்கு அம்பிடும் முதலைகளின் கருப்பு பணம் இதை பெருமையாக கார்த்தி எய்தி வேறு போட்டாள் நீளும் ஊழலுக்கு அதர்வனவர் என்றல் அர்த்தம் ஆகிறது கொள்ளை கொலை யாக கருப்பு பணம் கொண்ட முதல் கட்சி பிஜேபி தான் அதில் சந்தேகம் வேண்டாம்


N Sasikumar Yadhav
மார் 25, 2025 08:17

பாரதிய ஜனதா கட்சி வெளிப்படையான கட்சி என்பது இதன்மூலம் நிருபனமாகிறது ஆனால் உலகநாடுகளுக்கு நிதி கொடுக்குமளவுக்கு இருக்கும் எங்க திராவிட மாடல் கட்சியின் நிதி யாராலையும் கண்டுபிடிக்க முடியாதளவுக்கு மர்மமாக இருக்கும். தேர்தல் வந்தால் போதும் நாலாபுறமும் நுழைந்து மக்களிடம் போய் சேரும். தேர்தல் கமிஷனாலும் கண்டுபிடிக்க முடியாது அந்தளவுக்கு விஞ்ஞான ரீதியான கட்சி திராவிட மாடல்


Thamizhan
மார் 25, 2025 08:04

இது எல்லாம் ஊழலாக தெரியவில்லையா …


sankaranarayanan
மார் 25, 2025 07:48

திராவிட மாடல் கட்சிதான் தென்னிந்தியாவிலேயே அதில பணம் பல வழிலில் வந்து இப்போது அதன் கையிருப்பு பல மடங்காக வைத்திருக்கிறது எப்படி வந்தது என்று யாருமே கேட்டதும் கிடையாது கேட்கவும் முடியாது


J.Isaac
மார் 25, 2025 16:19

பிராமண


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை