உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.1,494 கோடி தேர்தல் செலவு பட்டியலில் பா.ஜ., முதலிடம்

ரூ.1,494 கோடி தேர்தல் செலவு பட்டியலில் பா.ஜ., முதலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த ஆண்டு நடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், அதிக செலவு செய்த கட்சிகள் பட்டியலில், 1,494 கோடி ரூபாயுடன் பா.ஜ., முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் 620 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல், ஒடிஷா, சிக்கிம் ஆகிய மாநில சட்டசபை தேர்தலும் கடந்த ஆண்டு மார்ச் 16 முதல் ஜூன் 6 வரை நடந்தன.இந்த தேர்தலில், அனைத்து கட்சிகளும் 3,352 கோடி ரூபாயை செலவிட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.லோக்சபா தேர்தல் நடந்து 90 நாட்களுக்குள்ளும், சட்டசபை தேர்தல் நடந்து 75 நாட்களுக்குள்ளும் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம், செலவு தொடர்பான தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும்.இதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்து, இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:கடந்த ஆண்டு நடந்த லோக்சபா மற்றும் நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் 2,204 கோடி ரூபாயை செலவழித்துஉள்ளன. இது கட்சிகள் செலவழித்த தொகையில் 65.75 சதவீதம். இதில் ஆளும் பா.ஜ., 1,494 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது. இது மொத்த செலவுத்தொகையில் 44.56 சதவீதம். காங்கிரஸ், 620 கோடி ரூபாயை செலவிட்டுஉள்ளது.தேர்தலுக்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், தேசிய கட்சிகளுக்கு 6,930 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துஉள்ளன. மாநில கட்சிகளுக்கு, 515 கோடி ரூபாய் கிடைத்துள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Varadarajan Nagarajan
ஜூன் 23, 2025 10:28

இலவச திட்டங்களால் மக்களை சோம்பேறிகளாக மாற்றி லஞ்சத்தால் அரசியல்வியாதிகள் கோடிகளை குவித்துக்கொண்டிருக்கும் நிலையில் நாட்டை பிடித்துள்ள பிணியிலிருந்து மீட்டு கமிஷன் இல்லாமல் வளர்ச்சி திட்டங்களையும் நாட்டின் பாதுகாப்பு திட்டங்களையும் முன்னெடுத்து நடத்தி வளர்ந்த நாடாக மாற்ற இந்த செலவு மிக மிக அவசியமானது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 23, 2025 06:50

தேவையற்ற செய்தி. குன்றிய நாட்டில் மட்டும் தொகுதிக்கு நூறு கோடி வரை ஜஸ்ட் மாடலாக செலவு செய்ததாக தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே செய்திகள் வெளியாயின. கோவை மாநகராட்சி தேர்தலுக்கு மட்டுமே வெறும் மாடலாக நூறு கோடிகளுக்கும் மேல் செலவு செய்தார்கள் . உண்மை இப்படி இருக்க அகில இந்தியாவில் யாரோ முதலிடம் என்று எங்களை விட்டுவிட்டு யாருக்கோ முத்திரை குத்துவதை குன்றியம் ஏற்காது


Kasimani Baskaran
ஜூன் 23, 2025 03:55

செல்வபெருந்தொகையை வைத்துக்கொண்டு காங்கிரஸ் இந்த அளவுக்கு செலவு செய்திருப்பது ஆச்சரியம்..


திகழ்ஓவியன்
ஜூன் 23, 2025 07:25

கமிஷன் வாங்குவது சட்டப்படி சரி என்ற நிலை உருவாக்கிய மோடி அரசு


சமீபத்திய செய்தி