உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உள்நோக்கத்துடன் பழி சுமத்துகிறார் அமித் ஷா; லோக்சபா விவாதத்தில் கனிமொழி வருத்தம்!

உள்நோக்கத்துடன் பழி சுமத்துகிறார் அமித் ஷா; லோக்சபா விவாதத்தில் கனிமொழி வருத்தம்!

புதுடில்லி: ''உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா பழி சுமத்துகிறார்,'' என லோக்சபா விவாதத்தின் போது தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசுகையில் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7uebxkkx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லோக்சபாவில் ஆப்பரேஷன் சிந்தூர் விவாதத்தின் போதுல திமுக எம்பி கனிமொழி பேசியதாவது: தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை பிறகு, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடந்தது.உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் மீது அமித்ஷா பழி சுமத்துகிறார். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தமிழர்களின் பெருமையை பா.ஜ.,வினர் கண்டுபிடிக்கிறார்கள். பயங்கரவாத தாக்குதலை நீங்கள் தடுத்திருக்க வேண்டாமா? பயங்கரவாதத்தால் இறப்பவர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை; அவர்களின் வம்சமே பாதிக்கப்படுகிறது. முந்தைய பயங்கரவாத தாக்குதலில் நீங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா? பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தடுக்க எப்படி தவறினீர்கள்?

ஜனநாயகம்

நீங்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு கவலை இல்லை. மக்கள் ஓட்டளித்து தேர்வு செய்யும் வரை நாங்கள் பார்லியில் இருப்போம். தேர்தல் வெற்றி என்பது தேர்தல் கமிஷனின் உதவியுடனோ சிறப்பு தீவிர திருத்தம் மூலமாகவோ இருக்கக் கூடாது. ஜனநாயகம் மூலம் இருக்க வேண்டும்.

இந்திய வரலாறு

தமிழகத்தில் இருந்து தான் இந்திய வரலாறு எழுதப்பட வேண்டும் என்று ஸ்டாலின் பேசுவதை ஏற்க மறுக்கிறீர்கள். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி பேட்டி அளித்த விக்ரம் மிஸ்ரியின் குடும்பத்தையே மோசமாக விமர்சித்தனர்.

துணை நிற்போம்

விக்ரம் மிஸ்ரியின் குடும்பத்தையே மோசமாக விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு துணை நிற்போம் என்று உறுதி அளித்தோம். இந்தியாவின் இறையாண்மையை நம்புகிறேன். இவ்வாறு கனிமொழி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

vijayaraj
ஆக 05, 2025 15:02

ஒவ்வொரு ஆணவக்கொலை நடக்கும் போதும் அடுத்த முறை நடக்காமல் தடுக்க வேண்டாமா? அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் என்று சொன்னீர்கள். அது போல தான் இதுவும். நாங்கள் வந்தால் சாராய கடை எல்லாம் மூடுவோம் என்று சொன்னீர்கள். மூடாமல் சர்க்கரை ஆலை வாங்கி அதை சாராய ஆலையாக மாற்றினீர்கள். தாங்கள் சொன்ன மாதிரி விதவைகள் இல்லையோ ? எது சொன்னாலும் பொய். பொய் பேசியே கட்சி நடத்தி கொள்ளை அடிக்கும் கூட்டம் தான் உங்கள் குடும்பம். யாரும் இனி உங்களை நம்புற மாதிரி இல்லை.


Ganapathy
ஆக 01, 2025 22:39

கள்ளக்குறிஞ்சீல நடந்த கள்ளச்சாராய கொலைகளை திராவிட களவாணிகள் ஏன் தடுக்கவில்லை? குடிநீரில் மனித கழிவை கலந்தவனை ஏன் பிடிக்கவில்லை? ஏழை தலித் ஹிந்துக்கள் மீது ஏனிந்த வெறுப்பு?


sridhar
ஜூலை 30, 2025 01:07

தேச விடுதலை போராட்டத்தில் உயிரை துச்சமாக மதித்து திமுக திக தலைவர்கள் போராடியதை யாரும் மறந்து விடக்கூடாது . ஈ வே ரா அண்ணா போன்றவர்கள் வெள்ளையருக்கு ஆதரவு தெரிவித்தஉடன் தான் அவன் தலை தெரிக்க இந்த நாட்டை விட்டே ஓடினான் .


Ramesh Sargam
ஜூலை 29, 2025 22:53

திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் வேலை தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்று பொய்ச்சொல்லி ஆட்சியை பிடித்த நீங்கள் அமித் ஷா எதிரில் நின்று பேசுவதே தவறு.


Vijay D Ratnam
ஜூலை 29, 2025 22:43

உலகப்பணக்காரர்கள் வரிசையில் வேகமாக வந்து கொண்டிருக்கும், எந்த தொழிலும் செய்யாமல் கோடிகளை குவித்துக்கொண்டு இருக்கும் ஜெய்ஷாவின் அப்பா அமித்ஷாவின் பேச்சுக்கு கனிமொழி கண்டனம் தெரிவிக்கிறாராம். நம்பிட்டோம். எங்க நெற்றியில் என்ன இளிச்சவாயன், கேனையன்னு எழுதி ஒட்டியிருக்கா. அமித்ஷா கனிமொழி கள்ளக்கூட்டணிதான் நாறுதே. திமுக பாஜக கள்ள உறவு வெட்டவெளிச்சம் ஆக இருக்கே. ஒங்க குடும்ப கம்பெனியோட ஷேர் ஹோல்டர் மீது இப்டிலாம் பாயக்கூடாது அம்மணி.


Nagarajan S
ஜூலை 29, 2025 19:56

காங்கிரஸ் ஆட்சியில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் மும்பை தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள். தாக்குதலுக்கு முன் காங்கிரஸ் அவர்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுத்தது? அதனை இவரால் கேட்க முடியுமா?


Sivasankaran Kannan
ஜூலை 29, 2025 19:45

கனிமொழி பேசுவதை எல்லாம் இந்த நாடு கேட்க வேண்டி உள்ளது.. தலை எழுத்து..


MARAN
ஜூலை 29, 2025 19:05

நீயும் உன் கட்சிக்காரங்களும் நடத்தும் சாராய ஆலைகளை மூடி , தாய்மார்களின் தாலியை காப்பாத்து ,


theruvasagan
ஜூலை 29, 2025 18:50

தமிழர்களுக்கு தேசபக்தி எப்போதும் உண்டு. ஈர வெங்காய திராவிடனுகளுக்கு உண்டா என்பதுதான் கேள்வி.


திகழ்ஓவியன்
ஜூலை 29, 2025 19:08

அதே தான் 87 % இந்துக்களுக்கு தேசபக்தி உண்டு 3 % ஹிந்துக்களுக்கு உண்டா


theruvasagan
ஜூலை 29, 2025 22:20

அந்த 3%ல் சுதந்திரத்திற்காக போராடி நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் நிறைய பேர் உண்டு. விடுதலைக்காக போராடி எத்தனை திராவிட இயக்கத்தினர் அடி வாங்கினர். சிறை சென்றனர். சொத்து சுகம் குடும்பத்தை இழந்தனர் என்பதை தெரிவிக்கவும்.


g.kumaresan
ஜூலை 29, 2025 18:49

குடிப்பவர்களால் வம்சம் பாதிக்காதா ?


சமீபத்திய செய்தி