உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாய்மார்கள், சகோதரிகளின் ஆசி: பிரதமர் மோடி பெருமிதம்!

தாய்மார்கள், சகோதரிகளின் ஆசி: பிரதமர் மோடி பெருமிதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: 'தாய்மார்கள், சகோதரிகளின் ஆசீர்வாதங்கள் எனக்கு வந்து கொண்டே இருப்பதால், நான் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறேன்,'' என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.குஜராத் மாவட்டம் நவ்சாரியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு பெண்ணுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெண்களிடமிருந்து உத்வேகங்களைப் பெறுவது நமக்கு முக்கியம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jwxw7vgn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எங்கள் அரசு பெண்களுக்காக பாடுபடுகிறது. ஆயிரக்கணக்கான கழிப்பறைகளைக் கட்டி பெண்களுக்கு கண்ணியத்தை அளித்தோம். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிப் பாதையில் இந்தியா பயணிக்கிறது. புதிய பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மசோதா பெண்களை வலுப்படுத்துவதாகும். இது சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கான எனது அர்ப்பணிப்பு. ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஜனாதிபதியாக இருக்கிறார். இன்று பெண்களிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டிய நாள். நான் உலகின் மிகப் பெரிய பணக்காரன் என்று பெருமையுடன் சொல்ல முடியும். எனக்கு கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் ஆசீர்வாதங்கள் உள்ளன. இந்த ஆசீர்வாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதனால் தான் நான் உலகின் மிகப் பெரிய செல்வந்தராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பிரேம்ஜி
மார் 09, 2025 07:34

வழக்கமான வாய்! வழக்கமான வடை!


orange தமிழன்
மார் 08, 2025 21:26

உண்மையான, நேர்மையான தேசப்பற்றுள்ள நம் பாரத பிரதமர் வாழ்க......அனைத்து நல் உள்ளங்களின் ஆசிகள் அவருக்கு எப்பொழுதும் கிடைக்க ஆண்டவன் அருள் புரியட்டும்......


Narayanan Muthu
மார் 08, 2025 19:51

இந்த வாழ்த்துக்கள் யசோதாபெண்ணுக்கும் சேர்த்துதானே . மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற கூச்சம் சிறிதும் இல்லாதவர்.


Priyan Vadanad
மார் 08, 2025 16:13

சுய தம்பட்டம். நாட்டு நடப்பு பற்றி தெரியாத பிரதமர். முதலில் கூட இருக்கும் அட்வைஸர்களை மாற்றுங்கள். பெண்கள் பற்றி நன்றாக தெரியும். புரியும்.


Priyan Vadanad
மார் 08, 2025 16:10

எல்லாம் சரிதான். ஆனால் இன்றுவரை நாட்டின் முதல் பெண்மணி என்று நீங்கள் சொல்லும் நபரை பாராளுமன்ற திறப்பு விழாவுக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கும் வரவிடாமல் செய்தது எது என்று ஏன் இன்றுவரை வெளிப்படுத்தவில்லை? மணிப்பூரில் பெண்கள் குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை?


Petchi Muthu
மார் 08, 2025 16:00

பத்து வருடங்களுக்கு மேல் பிரதமராக இணைந்துள்ளதால் பணக்காரராக இருப்பது எந்த அதிசயமும் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை