உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ப்ளூ ப்ரின்ட் எப்போது... பீஹாரில் ஆட்சியமைப்பது குறித்து சிராக் பாஸ்வான் சொன்ன தகவல்

ப்ளூ ப்ரின்ட் எப்போது... பீஹாரில் ஆட்சியமைப்பது குறித்து சிராக் பாஸ்வான் சொன்ன தகவல்

பாட்னா: பீஹாரில் புது அரசை அமைப்பதற்கான ப்ளூ ப்ரின்ட் இன்றோ அல்லது நாளையோ தயாராகி விடும் என்று மத்திய அமைச்சரும், லோக் ஜன்சக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.பீஹார் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பாஜ 89 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சிராக் பாஸ்வானின் லோக் ஜன்சக்தி 19 இடங்களை வென்றுள்ளது. நிதிஷ் குமார் தலைமையிலான தற்போதைய அரசின் பதவிக்காலம் வரும் நவ.,22ம் தேதி வரை உள்ளது. எனவே, அதற்கு முன்பாக, புதிய அரசு பொறுப்பேற்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில், பீஹாரில் புதிய அரசு அமைப்பது குறித்து மத்திய அமைச்சரும், லோக் ஜன்சக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் சில தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது; பீஹாரில் புதிய அரசை அமைப்பது தொடர்பாக மூத்த மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். இன்றோ அல்லது நாளையோ அதற்கான ப்ளூ பிரின்ட் தயாராகி விடும். நவ.,22ம் தேதிக்கு முன்பாக புதிய அரசு பொறுப்பேற்று விடும், இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, நிதிஷ்குமார் 10வது முறையாக முதல்வராக பதவியேற்பு விழா மிக பிரமாண்டமாக நடைபெறும் என்று ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. மேலும், பிரதமர் மோடியும், பாஜ மூத்த தலைவர்கள் பங்கேற்கும் விதமாக, தேதி முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். புதிய அரசை அமைப்பது குறித்து தேஜ கூட்டணி எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை அல்லது நாளை மறுதினம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

KR india
நவ 16, 2025 20:07

பாரதீய ஜனதா கட்சி, தனி பெரும்பான்மையாக பீகாரில் 150 சீட் போட்டியிட்டு, 123 சீட் வெற்றி பெற்றிருந்தால், அல்லது தேர்தல் கூட்டணியில் , நிதிஷ் குமார் வெறும் 22 சீட் வெற்றி பெற்றிருந்து, பி.ஜெ.பி. 101 சீட்- டிலும் வெற்றி பெற்றிருந்தால், பி.ஜெ.பி. க்கு முதல்வர் பதவி என்பது சரியாக இருந்திருக்கும். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், திரு. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக அனுமதிப்பது தான் சரியாக இருக்கும். இல்லையேல், அவர் மனது மாற வாய்ப்புண்டு. அதற்கு, இடம் கொடுக்கக் கூடாது. ஏனெனில், நிதிஷ் கட்சி எதிரணிக்கு சென்றால், நிதிஷ் கட்சி 85 + RJD தேஜஸ்வி யாதவ் 25 + காங்கிரஸ் 6 + வலது, இடது, லெனின் கம்யூனிஸ்ட் 3 + AIMIM ஒவைசி 5 + மாயாவதி 1 + பிறர் 1 எல்லாம் சேர்த்தால் அரசமைக்க தேவையான 126 சீட் வந்து விடுகிறது. ஒருவேளை, மேற்கு வங்காளம், தமிழகம், கேரளா தேர்தல் முடிந்தவுடன், அனைவருக்கும், அனைத்து சாதி, மதத்தினருக்கும் ஒரே சமமான நீதி என்ற அடிப்படையில், தீண்டாமை ஒழிப்பு சட்டத்தை நீக்கினாலோ அல்லது அனைத்து சாதிக்கும் விரிவுபடுத்தினாலோ திரு. சிராக் பஸ்வான் கட்சியும் கூட, கோபித்துக் கொண்டு, அந்தப் பக்கம் செல்லக் கூடும். அப்படி பார்த்தால், அவரது L.J.P 19 சீட்டையும் கூட்டினால், மொத்தம் 126 + 19 == 145 பேர் எதிரணிக்கு சென்றால், பி.ஜெ.பி பாடு திண்டாட்டமாகி விடும். அது மத்திய ஆட்சியிலும் எதிரொலிக்கும். எனவே, அதற்கு கிஞ்சித்தும் இடம் கொடாமல், பிஹார் முதல்வர் பதவியை திரு.நிதிஷ் குமார் தொடரவே அனுமதிக்க வேண்டும். முக்கிய மந்திரி பதவிகளை மட்டும், பி.ஜே.பி எடுத்துக் கொள்ளலாம். நன்றி


Santhakumar Srinivasalu
நவ 16, 2025 19:47

தேவையில்லாமல் சிராக் பஸ்வானை பெரிய ஆள் ஆக்கீட்டங்க! அலப்பறையை தாங்க முடியாது?


K V Ramadoss
நவ 16, 2025 19:09

பதவி ஏற்பு என்பது ஒரு சடங்கு. இதை விழாவாக நடத்துவது புது அரசின் முதல் அனாவசிய செலவு .... இது தேவை இல்லை என்று ஏன் யாரும் நினைப்பதில்லை ?


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி