உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா-பாக்., எல்லை அருகே பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உடல்கள் மீட்பு: போலீசார் விசாரணை

இந்தியா-பாக்., எல்லை அருகே பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உடல்கள் மீட்பு: போலீசார் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ஜெய்சால்மரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் 18 வயது சிறுவன் என இருவரது சிதைந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் 18 வயது சிறுவன் என இருவரது சிதைந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த உடலை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=opd8bpme&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், பாகிஸ்தான் நாட்டு அடையாள அட்டைகள் மற்றும் சிம் கார்டுகள் மீட்கப்பட்டது. இது காதல் விவகாரமா அல்லது சதித்திட்டமா என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என ஜெய்சால்மர் போலீசார் தெரிவித்தனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே இருவரது சிதைந்த உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும், சந்தேகத்தையும் கிளப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூன் 29, 2025 12:11

அநேகமாக காதல் விவகாரமாகத்தான் இருக்கும்.


K V Ramadoss
ஜூன் 29, 2025 11:39

சிதைந்த உடல், பாகிஸ்தான் அடையாள அட்டை யாருடையதோ . சிம் கார்டு இதுவும் யாருடையதோ இவற்றை வைத்து அவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று எப்படி முடிவெடுக்க முடியும் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை