உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 737 மேக்ஸ் ரக விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு; போயிங் நிறுவனம் எச்சரிக்கை

737 மேக்ஸ் ரக விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு; போயிங் நிறுவனம் எச்சரிக்கை

புதுடில்லி: போயிங் நிறுவனம் அதன் 737 மேக்ஸ் ரக விமானங்களில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய மென்பொருள் கோளாறு குறித்து விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை மற்றும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.விமான தயாரிப்பில், உலகின் முன்னணி நிறுவனமான போயிங் அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஆர்லிங்டன் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்த 2400க்கும் மேற்பட்ட பி 737 விமானங்கள் உலகின் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் அகாசா விமான நிறுவனங்களிடம் இந்தியாவில் 100 விமானங்கள் உள்ளன.இந்நிலையில், சில பி737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் பிரச்னை இருப்பதை போயிங் நிறுவனம் கண்டறிந்துள்ளது. இது குறித்து விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை மற்றும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. விமானங்கள் தரையிறங்கும்போது ஏதேனும் காரணங்களால் முதல் முயற்சியை கைவிட்டு , இரண்டாவது முறையாக தரையிறங்க முயலும்போது இந்த கோளாறு ஏற்படுகிறதுஅந்த குறிப்பிட்ட சூழ்நிலையில், விமானத்தின் தானியங்கி வழிசெலுத்தல் அம்சம் தற்காலிகமாக செயலிழக்கக்கூடும். இதனால் விமானிகள் தானியங்கி உதவியின்றி, மேனுவலாக விமானத்தை இயக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இது விமானிகளின் பணிச்சுமையை அதிகரிக்கும்; நிரந்தர மென்பொருள் புதுப்பிப்பு வெளியாகும் வரை, இரண்டாவது முறை தரையிறங்கியவுடன் விமானத்தின் சிஸ்டமை ரீசெட் செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு போயிங் அறிவுறுத்தியுள்ளதுஇந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண போயிங் நிறுவனம் பணியாற்றி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து அகாசா விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: நாங்கள் போயிங் நிறுவனத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்; பாதுகாப்பிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறோம். எங்கள் விமான சேவைகள் தொடர்ந்து பாதுகாப்பாக இயங்குகின்றன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Vasan
செப் 28, 2026 17:17

2025ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தினருகே நடந்த விமான விபத்து அனைவருக்கும் நினைவிருக்கும் என நினைக்கிறேன். விமானத்தில் பயணிக்க முற்பட்ட 229 பேர், விமான ஓட்டி மற்றும் விமான பணிப்பெண்கள் என 12 பேர், என மொத்தம் 241 பேர் அகால மரணமடைந்தனர். ஒரே ஒருவர் மட்டும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தார். அவர் 11ஏ என்னும் எண்ணிடப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தார், விமானத்தில் அசாதாரண சத்தம் கேட்ட பொழுது தனக்கு அருகில் இருந்த அவசர கால கதவு வழியே வெளியே குதித்து விட்டதாக பின்னர் அவரே கூறினார். இதனை பாடமாக கற்றுக்கொண்டு, எல்லா இருக்கைகளின் பக்கத்திலும் அவசர கால வெளியேறும் கதவுகள் இருக்குமாறு விமானத்தை வடிவமைக்க வேண்டும்.


Vasan
செப் 28, 2026 16:41

2025ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி அகமதாபாத் விமான விபத்திற்கும் இது போன்ற தொழில் நுட்ப கோளாறு காரணமாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது.


அப்பாவி
செப் 28, 2026 10:05

உயிரை கையில் புடிச்சிகிட்டு போங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை