நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
துவாரகா: வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து துவாரகா நீதிமன்றம் நேற்று அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்ற தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாலை 3:11 மணிக்கு மின்னஞ்சல் வந்ததை நேற்று காலை பணிக்கு வந்தபோது, கவனித்தார்.காலை 10:50 மணிக்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அனைத்து வழக்குகளும் விசாரணையின்றி ஒத்திவைக்கப்பட்டன. அனைவரும் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.மோப்ப நாயுடன் வெடிகுண்டு கண்டறியும் படையினர் நீதிமன்றம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் எந்தவிதமான சந்தேகத்திற்கிடமான பொருளும் கண்டறியப்படவில்லை.