உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திட்டியதால் கொலையான முதலாளி மனைவி - மகன்: வேலைக்காரர் வெறிச்செயல்

திட்டியதால் கொலையான முதலாளி மனைவி - மகன்: வேலைக்காரர் வெறிச்செயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில், பணியில் அலட்சியமாக இருந்ததற்காக திட்டியதால் முதலாளியின் மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு தப்பிய வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர். டில்லியின் லஜ்பத் நகரில், குல்தீப் சேவானி என்பவர் தன் மனைவி ருச்சிகா மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மகனுடன் வசித்து வந்தார். அதே பகுதியில், அவர் துணிக்கடை நடத்தி வந்தார். அவரிடம் ஓட்டுநராக, பீஹாரின் ஹிஜாப்பூரைச் சேர்ந்த முகேஷ் என்பவர், நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். அவ்வப்போது, வீட்டு வேலைகளையும் அவர் செய்து வந்தார். சமீபத்தில், பணியில் அலட்சியமாக இருந்ததற்கு குல்தீபின் மனைவி ருச்சிகா, முகேஷை திட்டியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், குல்தீப் இல்லாத நேரம் பார்த்து நேற்று முன்தினம் இரவு அவரின் வீட்டுக்கு முகேஷ் சென்றார். தன்னை திட்டிய ருச்சிகா மற்றும் அவரின் 14 வயது மகனை கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொன்றார். பின், வீட்டின் கதவை பூட்டிவிட்டு அவர் தப்பிச் சென்றார்.இரவு வீட்டிற்கு வந்த குல்தீப், வீடு பூட்டியிருந்ததை அடுத்து, தன் மனைவி, மகனுக்கு போன் செய்தார். நீண்டநேரம் அவர்கள் எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், போலீசின் உதவியை நாடினார். போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, படுக்கையறையில் ருச்சிகாவும், குளியலறையில் அவரது மகனும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். வீட்டு படிக்கட்டு மற்றும் வாசலில் ரத்தக்கறை படிந்திருந்ததை அடுத்து, போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். வீட்டில் வேலை செய்த முகேஷ் மாயமானதை அடுத்து, அவர் மீது சந்தேகம் வலுத்தது. டில்லியை விட்டு முகேஷ் தப்பியதை அடுத்து, அண்டை மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதையடுத்து, உத்தர பிரதேச போலீசார் உதவியுடன் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.முதற்கட்ட விசாரணையில், திட்டியதால் முதலாளியின் மனைவி மற்றும் மகனை கொன்றதை முகேஷ் ஒப்புக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajalakshmi
ஜூலை 06, 2025 23:19

ஓட்டுநராக இருந்தவரை வீட்டு வேலைகளுக்கும் ஏன் அமர்த்தினர் ? இப்போதெல்லாம் கொலை செய்வது மிகவும் சகஜமாகி விட்டது. தண்டனையும் பெரிதாக கிடையாது. இறந்தவர்கள் மீண்டும் வருவார்களா ? அவரவர்கள் தங்கள் வீட்டு வேலையை தாங்களே செய்து கொள்வது உசிதம் . நமது சமூகமோ by default anti elite & pro allegedly poor.


makesh
ஜூலை 05, 2025 11:49

இதுக்கு தான் சோத்துல உப்பு கம்மியா சாப்பிடணும், நாங்க 90ஸ் எவ்ளோ திட்டினாலும் வாங்கிட்டு மறந்திடுவோம். இப்படி கோவப்பட்ட அடுத்த மாசம் வீடு வாடகை எப்படி கொடுக்கமுடியும்.


அப்பாவி
ஜூலை 04, 2025 10:04

செய்யற வேலை பிடிக்கலைன்னா நிறுத்திற வேண்டியதுதானே. எடக்கு மடக்கா திட்டியிருபாங்க. போட்டுத் தள்ளிட்டான்.


R SRINIVASAN
ஜூலை 04, 2025 07:30

இதற்கெல்லாம் காரணம் ஜாதி வெறியை தூண்டும் விதமாக அரசியல்வாதிகள்தான். தமிழ் நாட்டில் அடங்க மறு அத்துமீறு என்ற வார்த்தைகளை ஒரு அரசியல் தலைவர் உபயோகிக்கிறார். மைனா ரிட்டிகளுக்கு காவலனாக நிற்பதாகக்கூறி இரு மதத்தவர்களுக்கு இடையே சண்டையை மூட்டி விடுகிறார்கள். காமராஜர், ராஜாஜி, கக்கன் இருந்தவரையில் காங்கிரஸ் ஒழுங்காக இருந்தது. என்றைக்கு இந்திரா காங்கிரஸின் தலைவர் ஆனாரோ அன்றே காங்கிரஸ் குட்டிச்சுவராகி விட்டது. கபில் சிபல் கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் கிரிமினல்களுக்காக வாதாடுகிறார். இதனால்தான் மஹாத்மா காந்தி அவர்கள் இந்தியா சுதந்திரமடைந்தவுடன் காங்கிரெஸ்ஸை கலைக்க சொன்னார்.


Senthoora
ஜூலை 04, 2025 07:26

இதெல்லாம் பெரிய இடது விவகாரம், உண்மை குற்றவாளியை தீவிர விசாரணைசெய்து தண்டிகனும்,


Thravisham
ஜூலை 04, 2025 06:48

யாரை எங்கு வைக்க வைக்கணுமோ அங்கு வையுங்க. சிப்பந்தி / வேலையாளை வீட்டு வேலைக்கு அனுபாத்தீங்க. "யாரும் இருக்கும் இடத்தில இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே"


Kasimani Baskaran
ஜூலை 04, 2025 03:51

இது போன்று வெறி பிடித்தவர்களை உயிருடன் விட்டுவைப்பது நல்லதல்ல.


சமீபத்திய செய்தி