மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
4 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago
பெங்களூரு ஆசிரியர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, நேற்று மல்லேஸ்வரத்தில் உள்ள வித்யாமந்திர் கல்வி அறக்கட்டளை பள்ளியில், ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி வேட்பாளர் ரங்கநாத்துக்கு ஆதரவாக, ஆசிரியைகளிடம் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பிரசாரம் செய்தார்.பின், அவர் அளித்த பேட்டி:
எடியூரப்பா, பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தபோது, கல்வி துறைக்கு பல பங்களிப்புகள் செய்யப்பட்டு உள்ளன. புனிதமான கல்வி துறைக்கு தகுதியான நபரை தேர்வு செய்வது அனைவரின் கடமை.பெங்களூரு ஆசிரியர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளர் ரங்கநாத் களமிறங்குகிறார். இவர் தீவிரமான அரசியல்வாதி; பிரபல வழக்கறிஞர். சமூகத்துக்கு அதிகளவில் சேவை செய்து வருகிறார்.தற்போது இடைத்தேர்தலுக்கு யார் பொறுப்பு. எத்தனை முறை கட்சி மாறினார் அல்லது எம்.எல்.சி.,யாக இருந்து என்ன செய்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரின் பங்களிப்பு 'பூஜ்யம்'.இவ்வாறு அவர் கூறினார்.பெங்களூரு ஆசிரியர் தொகுதி ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி வேட்பாளர் ரங்கநாத்துக்கு ஆதரவாக மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பிரசாரம் செய்தார். இடம்: மல்லேஸ்வரம்.
4 hour(s) ago | 1
5 hour(s) ago
5 hour(s) ago