உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானா டி.எஸ்.பி.,யான குத்துச்சண்டை வீராங்கனை

தெலுங்கானா டி.எஸ்.பி.,யான குத்துச்சண்டை வீராங்கனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தெலுங்கானாவின் நிஜாமாபாதைச் சேர்ந்தவர் நிஹாத் ஜரீன், 28. பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான இவர், இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கமும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலமும் வென்று சாதனை படைத்துள்ளார்.சமீபத்தில் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் நிஹாத் ஜரீன் பங்கேற்றார்.இந்நிலையில், தெலுங்கானா அரசு இவருக்கு சிறப்பு டி.எஸ்.பி., அந்தஸ்துடன் கூடிய பணி வழங்கி கவுரவித்துள்ளது. இதைஅடுத்து, மாநில டி.ஜி.பி., ஜிதேந்தரை சந்தித்த நிஹாத் ஜரீன் நேற்று பணியில் இணைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

rama adhavan
செப் 20, 2024 04:29

இவருக்கு விளம்பரத் தொழிலில் கோடி கோடியாக வரும். எனவே அரசு வேலை தேவை இல்லை. ஒரு சப் இன்ஸ்பெக்டர் துணை கண்காளிப்பாளார் ஆக 30 வருடம் ஆகும். இவருக்கோ அல்வா மாதிரி கிடைக்கிறது. இவர் பின்னாளில் அரசியலில் இறங்குவார். இவர் ஒலிம்பிகில் எதுவும் சாதிக்கவில்லை. இப்போதும் இவர் வேலை கேட்கவில்லை. ஏதோ அரசியல் போல் தெரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை