உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார் மோதி சிறுவன் பலி

கார் மோதி சிறுவன் பலி

நொய்டா: புதுடில்லி அருகே நொய்டா 31வது செக்டார் ஏ பிளாக்கில் நேற்று முன் தினம் இரவு, பின்னோக்கி வந்த கார் மோதி நான்கு வயது சிறுவன் மீது மோதியது. சரிந்த சிறுவன் மீது கார் டயர் ஏறி இறங்கியது. விபத்து ஏற்பட்டவுடன் டிரைவர் காரை வேகமாக ஓட்டி தப்பினார். சிறுவனின் தந்தை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றார். பரிசோதை செய்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். சிறுவனின் தந்தை ஆஷிஷ் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கார் டிரைவரை நேற்று காலை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !