உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காதலன் கொலை வழக்கு; கேரள பெண்ணுக்கு தூக்கு தண்டனை!

காதலன் கொலை வழக்கு; கேரள பெண்ணுக்கு தூக்கு தண்டனை!

திருவனந்தபுரம்: கேரளாவில் விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு கோர்ட் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட எல்லையான கேரள மாநிலம் பாறசாலை மூரியங்கரையைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ், 23. திங்கள்சந்தை அருகே நெய்யூரில் தனியார் கல்லுாரியில், 'ரேடியாலஜி' இறுதியாண்டு படித்து வந்தார். கல்லுாரிக்கு பஸ்சில் வந்து சென்ற போது, களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறையைச் சேர்ந்த கிரீஷ்மா, 22, என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதற்கு கிரீஷ்மாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wu60o1a7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், பிப்ரவரியில் ராணுவ வீரர் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனால் கிரீஷ்மா, தன் காதலன் ஷாரோனுடன் தொடர்பை குறைத்தார். ஆனால், ஷாரோன் தொடர்ந்து அவருடன் பேச முயற்சித்தார். இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் ஷாரோனிடம் இருந்ததால், அவரை வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா, கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.வாந்தி எடுத்த அந்த வாலிபர், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். பாறசாலை போலீசார் கிரீஷ்மாவை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் கிரீஷ்மாவுடன் சேர்த்து அவரது தாய் சிந்து, மாமா நிர்மலாகுமரன் நாயர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு நெய்யாற்றின் கரை கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட கிரீஷ்மா, அவரது தாய் மாமன் நிர்மல்குமார் நாயரை குற்றவாளிகளாக கோர்ட் அறிவித்தது. கிரீஷ்மாவின் தாயார் சிந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விபரத்தை கோர்ட் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது மாமன் நிர்மல்குமார் நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, கிரீஷ்மா தரப்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. வயது, கல்வியில் படைத்த சாதனைகள் மற்றும் முன்பு எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடாததை காரணம் காட்டி, தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், அவரது வாழ்க்கையை மறுசீரமைக்கத் தேவையான வாய்ப்பை கிரீஷ்மாவுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அவை ஏற்கப்படவில்லை.முன்னதாக, ஷாரோனை காதலிக்கும் போது, இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோக்களை காட்டி மிரட்டியதால், வேறு வழி தெரியாமல் கரீஷ்மா இந்த செயலை செய்ததாக அவரது தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், பிளாக்மெயில் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அரசு தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Sivagiri
ஜன 20, 2025 19:39

கொல்கத்தா பெண் டாக்டர் , வழக்கை கேரளாவுக்கு மாற்ற வேண்டும் . . .


வல்லவன்
ஜன 20, 2025 16:38

அழகை நம்பாதே பெண் சிரிப்பு விஷம்


Ramesh Trichy
ஜன 20, 2025 16:25

கொல்கத்தா காரனுக்கு ஆயில் தண்டணை , கேரள பெண்ணுக்கு தூக்கு தன்டனை , நில்லா இருக்கு நியாயம் . இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல , இதற்கு துக்கு தண்டனை கொடுத்து இருக்க தேவையில்லை . So many of these types of cases are happening in India but not given such extreme punishments. Why only in this case? because of the media focus and the girls family doesnt have any support from the rich or political. I can understand the pain of the boys family, but the boy also made a mistake. I am sure this girl will come out of jail after 12 years max. She should be given a chance to correct the mistake and live a peaceful life.


RK
ஜன 20, 2025 15:03

ஊழல் மலிந்த தமிழ்நாட்டை விட கேரளா நீதிமன்றம் சரியான தீர்ப்பை மரண தண்டனை வழங்கி இருக்கிறது. உச்ச நீதி மன்றமும், குடியரசு தலைவர் அவர்களும் தண்டனையை உறுதிப்படுத்தி நீதியை நிலை நாட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். கேரளா நீதிமன்றத்துக்கும் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கும் வாழ்த்துக்கள். ஏன் தமிழ்நாட்டை சொல்கிறேன் என்றால் குற்றவாளி பெண் வீடு கேரளா பகுதி அருகில் தமிழ்நாட்டில் உள்ளது. குற்றவாளி தரப்பில் இந்த வழக்கை தமிழ்நாடு போலீஸ் விசாரிக்க வேண்டும் என முறையிட்டனர். பணம் கொடுத்து அதிகாரிகளை விலைக்கு வாங்கலாம் என்ற நோக்கத்தில் ஆனால் கொலை செய்யப்பட்ட பையன் வீடு கேரளா அதனால் கேரளா நீதிமன்றம் கேரளா போலீஸ் விசாரணை செய்ய மட்டுமே அனுமதித்தது. அதனால் குற்றவாளிக்கு சரியான தீர்ப்பு மரண தண்டனை கிடைத்தது.


Kayal Karpagavalli
ஜன 20, 2025 14:51

மூட நம்பிக்கைகள் கண்களை மறைக்கும்...... பெற்றோர்கள் வழி நடத்தனும்..... அல்லது இதுக்கும் போன் ஆப் வரணும் ....பெர்சோனாலிட்டி டெவெலப்மெண்ட் ஆப்


Nagarajan D
ஜன 20, 2025 14:27

தண்டனை நிறைவேற்றினால் தான் சரி... எப்படியும் மேல் முறையீடு கீழ் முறையீடு இடைக்கால தடை வழக்கு ஒத்திவைப்பு என்று இழுப்பானுங்க கடைசியில் பெண் என்பதால் கருணை அடிப்படையில் விடுதலை என்று செய்தி 60 வருடம் கழித்து தீர்ப்பு தருவனுங்க .


Sivak
ஜன 20, 2025 23:10

உண்மை ... தண்டனையை நிறைவேற்ற வேண்டும் .. ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை என்று சர்வ சாதாரணமாக சட்டம் போடுகிறார்கள் .. ஒரு ஆணை பலாத்காரம் செய்ய முடியாது கொலை தான் செய்ய முடியும் .. அப்போது இவளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றியே ஆக வேண்டும் ...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 20, 2025 14:00

மல்லூஸ் பொதுவாகவே டேஞ்சர் ..... அதிலும் அந்த ஊரு மூரக்ஸ் ரொம்ப ஆபத்தானவங்க .....


m.arunachalam
ஜன 20, 2025 13:50

இதை அனைத்து நீதிமன்றங்களும் நிலைநிறுத்த வேண்டும் . வாழ தகுதியற்றவள் .


GMM
ஜன 20, 2025 13:50

காதலனை பிடிக்கவில்லை என்றால், பெண்ணை விட்டு விலக வேண்டும். வாலிபன் நெருக்கமாக போட்டோ எடுக்க வேண்டிய அவசியம் என்ன? வீட்டில் பெண் மூலம் விஷம் கொடுக்கப்பட்டதா அல்லது பழி வாங்க அந்த வாலிபர் தானே குடித்தாரா ? பெண்ணுக்கு முன் குற்ற பின்னணி இல்லை. அந்த பெண்ணை தூக்கில் போட வேண்டும் என்று வாதிட்டது போல் உள்ளது. மிரட்டிய வாலிபனுக்கு எந்த தண்டனையும் இல்லை. வக்கீல்களுக்கு வாய் திறந்தால் பொய் தான் வரும்.? தூக்கிற்கு தகுதியற்ற தீர்ப்பு.


S Ramkumar
ஜன 20, 2025 15:20

காதலனே குடித்த்து இருந்தால் கேஸ் தற்கொலை கேஸ் என்று ஆகும். காதலி தற்கொலைக்கு தூண்டினார் ன்று மாறி இருக்கும். இவர்கள் ஏன் நெருக்கமாக படம் எடுத்த்து கொண்டார்கள். இந்த பையனும் ஏன் அங்கு சென்றான். அதான் நிச்சயதார்த்தம் ஆகி விட்டதே இருவருக்கும் தெரியுமல்லவா. பிறகு எதற்கு சந்திப்பு. படங்களுடன் வேறு என்னமோ இருக்கு. நார்மலாக இந்த காதல் கேசுகளில் இழப்புக்கு உள்ளவர் கடிதம் போட்டோ போன்றவை இருந்தால் அடுத்த பக்கத்தை சீண்டி பார்ப்பது வழக்கம் தான். இங்கு கொஞ்சம் ஓவர் ஆகி கொலை வரை சென்றது துரதிஷ்டம் தான்.


Natchimuthu Chithiraisamy
ஜன 20, 2025 13:35

காதல் விஷம் என்று படிக்கும் இளைஞர்களுக்கு செய்தி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை