உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலை வழக்கில் சிறுவர்கள் கைது

கொலை வழக்கில் சிறுவர்கள் கைது

புதுடில்லி:மத்திய டில்லி ஆனந்த் பர்பத், தலிவாலன் பஸ்தி துர்கா மந்திர் அருகே, 2ம் தேதி, 16 வயது சிறுவன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தான். தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஜீவன் மாலா மருத்துவமனை அருகே இரண்டு சிறுவர்களை கைது செய்தனர். சம்பவ இடத்தின் அருகே, ரத்தக்கறை படிந்த கத்தி மீட்கப்பட்டது. விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ