உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா; ஆம் ஆத்மியில் இருந்தும் விலகல்!

டில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா; ஆம் ஆத்மியில் இருந்தும் விலகல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, கைலாஷ் கெலாட் அறிவித்துள்ளார். அவர் ஆம்ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறார்.டில்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லியின் போக்குவரத்து அமைச்சராக அசோக் கெலாட் இருந்து வந்தார். இவர் இன்று (நவ.,17) டில்லி மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kr2e257d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதுமட்டுமின்றி, அவர் ஆம்ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக கூறி கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டில்லி முதல்வரும், கல்வித்துறை அமைச்சருமான அதிஷி ஆகியோருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: டில்லி மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகளை கட்சியால் நிறைவேற்ற முடியாதது அதிருப்தி அளிக்கிறது. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் காரணமாக பதவி விலகுகிறேன். யமுனை நதியை சுத்தப்படுத்த தவறிவிட்டோம். மக்களுக்கு ஒரு தூய்மையான யமுனை நதியை உருவாக்குவோம் என தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்தோம். ஆனால் அந்த உறுதிமொழியை நிறைவேற்ற தவறிவிட்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் விரைவில் பா.ஜ., கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Smba
நவ 17, 2024 15:50

போது மாண அளவு வந்து விட்டால் இதுதான் நல்ல முடிவு


Duruvesan
நவ 17, 2024 13:52

அடுத்த கட்சியை உடைக்கும் பிஜேபிக்கு ஒரு நாள் வருல, அப்போ கட்சி இருக்காது


sankaranarayanan
நவ 17, 2024 13:29

சுத்தப்படுத்த முடியாத யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே கண்ணனோடு நான் ஆட என்ற பாட்டிற்கு இணங்க இனி ஆம் ஆத்மீ பார்ட்டி அமைச்சர்களும் கேஜரிவாலும் சேர்ந்து ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்


Dhurvesh
நவ 17, 2024 13:24

எலெக்ட்ரோஅல்போன்ட் வேலை செய்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை