உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செய்திகளை படிப்பதில்லையா? தலைமை செயலாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

செய்திகளை படிப்பதில்லையா? தலைமை செயலாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இது எவ்வளவு தீவிரமான விஷயம், செய்திகளை படிப்பதில்லையா? என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத தலைமை செயலாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழகம் உள்பட 26 தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு, அனைத்து மாநிலங்களும் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bcdwro8s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கு இன்று (அக் 27) மீண்டும் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் டில்லி மாநகராட்சி ஆகியவை மட்டுமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை.இதற்கு நீதிபதிகள் கூறியதாவது: இது எவ்வளவு தீவிரமான விஷயம் என்று உங்களுக்கு தெரியாதா? தெருநாய் கடி சம்பவம் தொடர்பான செய்திகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்த போதிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை. எதற்காக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்பதற்கு பதில் அளிக்க வேண்டும்; சிலர் தங்களுக்கு நோட்டீஸ் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். அவர்கள் செய்திகளை படிப்பதில்லையா? இது தொடர்பாக தமிழகம் உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தாமரை மலர்கிறது
அக் 27, 2025 19:25

நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்வது மாநில அரசின் கடமை. அதை செய்யாமல், அந்த பணத்தை கொள்ளையடிக்க கூடாது. குடும்ப கட்டுப்பாடு செய்ய உத்தரவு இடுங்கள். ஆனால் நாய்களை எல்லாம் ஒரு சிறையில் அடைத்து கொல்லுங்கள் என்று உத்தரவு இட நீதிபதி ஒன்றும் கடவுள் கிடையாது.


SIVA
அக் 27, 2025 17:29

பாட்டீலுக்கு பத்து ரூபாய் லஞ்சம் வாங்கும் செய்திகளை படிக்காததது போன்று இதையும் படிக்கவில்லை சார் ....


என்றும் இந்தியன்
அக் 27, 2025 16:39

தன்னுடைய இனத்தவரை பழிப்பதை ஒருக்காலும் இந்திய கட்சிகள் ஒத்துக்கொள்ளாது. ஆகவே தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை???


Techzone Coimbatore
அக் 27, 2025 16:11

தெரு நாய்கள் மீது மக்கள் காட்டும் வெறுப்பு ஏன் ஆறறிவு உள்ள குடிகாரர்கள், போதை வெறியர்கள், பாலியல் குற்றவாளிகள் மீது ஏன் கோபம் பொங்குவது இல்லை. 8வயது குழந்தையை சாலையில் நடக்கும் போது தூக்கி கொண்டுபோய் பாலியல் அத்துமீறல்கள் செய்துள்ளார். அதுபோன்று பல குற்ற சம்பவங்களை தடுக்க வக்கு இல்லாத, அக்கரை பொது மக்கள் இந்த ஐந்து அறிவு ஜீவன் மீது தான் கோபம் வருகிறது. சுற்றுப்புற குப்பைகளை கொட்டுவது சாலை விதிகளை மதிப்பது இல்லை தினம் ஆயிரம் கணக்கான மக்கள் சாலை விபத்தில் உயிரிழப்பு நடக்கின்றன மது கடையை திறந்தால் நாக்கு தொங்க போட்டு கொண்டு குடிக்க அலைவது. 6 மாதம் முதல் 60 வயது வரை உள்ள பெண்களை பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன போதைக்கு சிறு வயதிலே அலைவது காசு வாங்கி ஒட்டு போடுவது சாதி, மதம் என்று அடித்து கொள்வது மருத்துவ துறையில் நடக்கும் திருட்டுத்தங்கள்எஸ்: கிட்னி திருட்டு இது போன்ற நற்காரியங்கள் மக்கள் வெறுக்கும் தெரு நாய்களா செய்கின்றன.


visu
அக் 27, 2025 18:46

இப்படி பேசி பேசியே எந்த விஷயமும் நடக்காமல் தடுக்கிறீர்கள் இப்போ பிரச்சினை நாய் தொல்லை பற்றி அதை பற்றி பேசுங்க பிற பிரசனைகளை தனியா நீங்க எடுத்து பேசுங்க இப்படி குழப்புவதால் நாய் பிரசினையும் முடிவில்லாமல் நீளும்


Mohanakrishnan
அக் 27, 2025 15:27

Outside Trichy corporation 15 stray dogs


KRISHNAN R
அக் 27, 2025 14:29

நீதி மன்றம்,,,,, மக்களை காப்பாற்றினால் நன்று


GMM
அக் 27, 2025 14:25

தலைமை செயலர் நேரில் ஆஜர் முதல்வர் ஆஜர் ஆவதற்கு சமம். முதல்வரை கேட்காமல் எதையும் செயலர் செய்ய மாட்டார்கள். நீங்கள் கவர்னர், தேர்தல் ஆணையர் என்று எண்ணி விட்டீர்கள். சுயாட்சி கனவில் நிர்வாக முறை மறந்த செயலர்கள். ப்ளூ, பச்சை வனவிலங்கு ஆர்வலர்கள் என்ற போர்வையில் வெறிநாய் மற்றும் மக்களை மோத விட்டு, வியாபார யுக்தி கையாளும் கூட்டம் நீதிமன்ற வாசல் மிதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.


Vasan
அக் 27, 2025 14:12

நீதிமன்றத்தை மதிக்கும் தலைமை செயலாளர்களுக்கு பாராட்டுக்கள்.


ஜெகதீசன்
அக் 27, 2025 14:11

கோர்ட்டும் முதலில் தெரு நாய்களை அப்புறப்படுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது. பிறகு ஒரு வாரத்தில் பின் வாங்கியது. எல்லோரும் தானே செய்திதாள் வாசிக்கிறார்கள். மொத்தத்தில், தெரு நாய்களால் சாமானிய மக்கள் படும் பாடு பற்றி ஜனநாயகத்தில் யாருக்கும் அக்கரை இல்லை.


SP
அக் 27, 2025 13:34

முதலில் ப்ளூகிராஸ் அமைப்பிற்கு தடை போட வேண்டும். அல்லது தெரு நாய்களை எல்லாம் ப்ளூ கிராஸ் உறுப்பினர்கள் அவர்களது செலவில் பராமரித்து வர வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.


ஜெகதீசன்
அக் 27, 2025 14:06

சரியாக சொன்னீங்க SP சார்


Techzone Coimbatore
அக் 27, 2025 16:13

விஜய் கூட்டத்தில் ஒரே இரவில் 41 பேர் இறந்தனர். எந்த தெரு நாய்கள் இறந்து போனார்கள்? தயவு செய்து தெரு நாய்கள் வருபவர்கள் பைரவரை கடவுளை வேண்ட வேண்டாம்


MUTHU
அக் 27, 2025 18:51

என்னைக்காவது உன் வீட்டு ஆளுக பொட்டலத்தை கவ்வப்போகுது அன்னைக்குதான் வலிக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை