உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூன்று வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வாங்க : மத்திய அரசை வலியுறுத்தும் கங்கனா

மூன்று வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வாங்க : மத்திய அரசை வலியுறுத்தும் கங்கனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாண்டி: திரும்ப பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு மீண்டும் கொண்டு வரவேண்டும். அதனை கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் என பா.ஜ., எம்.பி., கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில்,கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டன. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தன. இதற்கு ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் ஒரு ஆண்டுகளுக்கு மேல் தொடர் போராட்டம் நடத்தியதால், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது சட்டங்களின் நன்மைகளை, விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியாமல் போனது என பிரமதர் மோடி வருத்தம் அளிக்கிறது.இந்நிலையில் ஹிமாச்சல் பிரதேசம் மாண்டி தொகுதி பா.ஜ., எம்.பி.யும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ராணாவத் செய்தியாளர்களிடம் கூறியது,நாட்டின் வளர்ச்சிக்கு தூணாக இருப்பது விவசாயிகளே, அவர்களுக்கு நன்மை பயக்கும் நோக்குடன் மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு திரும்ப பெறப்பட்டது.இதனை மத்திய அரசு மீண்டும் கொண்டு வரவேண்டும். மீண்டும் கொண்டு வர விவசாயிகள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். உங்களின் நலனுக்காக தான் விவசாயிகளிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.கங்கனா ரணாவத்தின் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்., கட்சியினர், அப்படி ஒரு போதும் மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வர விடமாட்டோம். கங்கனா நினைப்பது நடக்காது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sathyanarayanan Sathyasekaren
செப் 25, 2024 03:22

மிகவும் சரியான கருத்துக்களை சொல்லி இருக்கிறார். வழக்கம் போல கான் ஸ்கேம் காங்கிரஸ் கதறுவதை பார்த்தாலே தெரிகிறது. பஞ்சாப், ஹரியானா என்ற இரு மாநில விவசாயிகளை தூண்டிவிட்டு ஒரு அருமையான நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கிடைத்த நன்மைகளை கெடுத்தது இந்த காங்கிரஸ். மறுபடியும் இந்த சட்டங்களை கொண்டுவரவேண்டும்.


kantharvan
செப் 24, 2024 23:31

இவரு ஒரு ஐந்தாம்படை.போற போக்க பார்த்தால் மோடி இதுக்கு எல்லாம் லாயக்கு இல்லை என்னை எமெர்ஜென்சி இந்திரா போல பிரதமர் ஆக்குங்கள் ..காலிஸ்தான் வாதிகளை காலில் நசுக்குவேன் என்று கிளம்பி விடுவார்.. எதுக்கும் மோடி உஷாரா இருப்பதே அவருக்கு நல்லது.


Nallappan
செப் 24, 2024 23:27

ஆள் எப்படியோ எனக்கு தெரியாது.கருத்து மிகச்சரியானது.நானும் விவசாயி தான் சில நேரங்களில் நல்ல விலை கிடைக்காமல் உழைத்த காய்கறி வீணாகும் போது மனசு வலிக்கிறது...


J.Isaac
செப் 24, 2024 23:02

வெட்டி பந்தா


J.Isaac
செப் 24, 2024 22:31

நடிக்க தான் தகுதி


kantharvan
செப் 24, 2024 23:38

மடி வத்தி போன மாட்டை யாரும் கண்டு கொள்ள மாட்டார்களாம் ?? அந்தோ பரிதாபம் ..சந்திரமுகி 2 பார்த்தவனெல்லாம் பேதில ஆஸ்பிடலு அட்மிட்டு ..வேஷமெல்லாம் கலைஞ்சு போச்சு ..காசும் போச்சு எல்லாம் போச்சு .. எமெர்ஜென்சில வச்சு காபாத்தனும் ஷாவும் ஷோவும்


Bala
செப் 24, 2024 22:15

waste piece


சுந்தர்
செப் 24, 2024 22:10

சட்டங்கள் சரியாக இருந்தால் மீண்டும் கொண்டு வந்தால் விவசாயிகளுக்கு நன்மையே. அவர் சரியாகத்தான் கூறியுள்ளார். இப்ப இல்லைன்னா எப்பவும் முடியாது. எப்பதான் விவசாயிகள் பண வசதியுடன் வாழ்வது? பல பஞ்சாபி விவசாயிகள் காலிstan குரூப்பிடம் சிக்கி போராட்டம் செய்து அனைத்து விவசாயிகளுக்கும் வாய்ப்பில்லாமல் செய்து விட்டனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை