மேலும் செய்திகள்
சகோதரி கணவர் கொலை; 3 மைத்துனர்கள் கைது
18-Dec-2024
சாம்ராஜ் நகர்; சாம்ராஜ் நகர் கொள்ளேகாலின் ஈத்காமொஹல்லாவை சேர்ந்தவர் பர்மான், 30. நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு வந்த இவர், சகோதரர் குழந்தைக்கு வெள்ளரிக்காய் ஊட்டி விட்டார்.இதை பார்த்த அவரது சகோதரி அய்மன் பானு, 26, 'உடல் நலம் பாதித்த குழந்தைக்கு வெள்ளரிக்காய் ஊட்டுகிறாயே' என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த பர்மான், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து, சகோதரியின் கழுத்து பகுதியில் குத்தினார்.இவரை தடுக்க வந்த தந்தை சையது, 60, சகோதரரின் மனைவியான தஸ்லிமா தாஜ், 25, ஆகியோரையும் கத்தியால் குத்தினார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அய்மன் பானு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கொள்ளேகால் டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.படுகாயமடைந்த தந்தையும், அண்ணியும் எஸ்.ஐ.எம்.எஸ்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார், பர்மானை கைது செய்து விசாரிக்கின்றனர்.
18-Dec-2024