உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பூஞ்ச்: ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அதில் இருந்து மீண்டு வருவதற்கு பாகிஸ்தானுக்கு நீண்ட நாட்களாகும்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, காஷ்மீரில் எல்லைப் பகுதியில் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதில், மக்களின் வீடுகள் சேதம் அடைந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yvv8ct45&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு பாதுகாப்பு சூழ்நிலை, அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததுடன், பாகிஸ்தான் அத்துமீறலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினார்.இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பாகிஸ்தான் அத்துமீறலுக்கு எல்லை பாதுகாப்புப் படையினர் கடுமையான பதிலடி கொடுத்தனர்.குறுகிய காலத்தில் எதிரிகளின் முகாம்களை சேதப்படுத்தியதுடன், அழித்ததும் குறிப்பிடத்தக்க சாதனை. எதிரிகளின் கண்காணிப்பு கட்டமைப்பை அழித்தது அவர்களுக்கு பெரிய பின்னடைவு. இதில் இருந்து மீள்வதற்கு பாகிஸ்தானுக்கு நீண்ட நாட்கள் ஆகும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, நமது எல்லை மற்றும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு, அதன் 118 முகாம்களை அழித்து எல்லை பாதுகாப்பு படையினர் உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான பதிலடியை கொடுத்தனர்.அவர்களின் கண்காணிப்பு கட்டமைப்பை தாக்கி அழித்தனர். ஒவ்வொன்றையும் அமைக்க 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

swam nithi
மே 30, 2025 22:17

He is very smart . Anytime we must alert…….


ராமகிருஷ்ணன்
மே 30, 2025 21:19

ஒவ்வொரு முறையும் போர் நிறுத்தம் செய்யும் போது அடுத்த போருக்கு தேவையான ஆயுதங்களை குவித்து தயாரானது விடுதலை புலிகள் கூட்டம். மொத்தமாய் அழிந்த பிறகு ஓய்ந்தது. பாக்கிஸ்தான் விஷயத்தில் தனது ஆயுதங்களை பயன்படுத்த முடியாத நிலையில் சரண் அடைந்தனர். மறுபடியும் ஆயுதங்களை பெருக்கிக் கொண்டு மீண்டும் சண்டைக்கு வரத்தான் செய்யும். இனிமேல் ஏதாவது செய்தால் முழு பாக்கிஸ்தானில் உள்ள அனைத்து தீவிரவாத சக்திகளையும் அழிப்பதோடு, ஆயுத பலத்தையும் துடைத்து அழிக்க வேண்டும். அவர்களுக்கு உதவுபவர்களையும் அழிக்க வேண்டும்.


மீனவ நண்பன்
மே 30, 2025 20:14

நரி இடம் போனா என்ன வலம் போனா என்ன ..மேல விழுந்து போகாதவரைக்கும் நாம் சீண்டாம இருப்பது தானே நல்லது


Ramesh Sargam
மே 30, 2025 20:08

நாம அப்படி நினைக்கிறோம். ஆனால் அமெரிக்காகாரனும், சீனாக்காரனும், இப்ப துருக்கிக்காரனும் அந்த பாகிஸ்தான்காரனுக்கு உதவி செய்து சீக்கிரம் மீட்டுடுவாங்க. இன்றைக்கு ரஷ்யா உதவி செய்ய போறாங்கன்னு ஒரு செய்தி. ஆகையால் நாம் அந்த மாதிரி ஆளுங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எந்த குழியில் என்ன பாம்பு இருக்கும் என்று நமக்கு தெரியாது.


Samy Chinnathambi
மே 30, 2025 18:24

வெறும் வாய் உதார் தான்..உங்களை யாரு அடிக்க வேணாம்னு சொன்னா? இப்போ பாருங்க அவன் வெற்றின்னு கொண்டாடுறான்..


vivek
மே 30, 2025 21:28

உனக்கு என்னப்பா...உனக்கு டாஸ்மாக் போதும்.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை