உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புல்லட் ரயில் திட்டத்தால் ஹைதராபாத் பெரிய வளர்ச்சி பெறும்; அஸ்வினி வைஷ்ணவ்

புல்லட் ரயில் திட்டத்தால் ஹைதராபாத் பெரிய வளர்ச்சி பெறும்; அஸ்வினி வைஷ்ணவ்

ஹைதராபாத்: பிரதமர் மோடி வழங்கிய 3 அதிவேக புல்லட் ரயில் வழித்தடங்களால் ஹைதராபாத் அதிவேக மையமாக உருவெடுக்கும் என்று ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.ஹைதராபாத்தில் அவர் கூறியதாவது; பிரதமர் மோடி ஹைதராபாத்திற்கும், தெலங்கானாவிற்கும் 3 அதிவேக புல்லட் ரயில் வழித்தடங்களை வழங்கியுள்ளார். இது இப்பகுதியின் ஒட்டுமொத்த அமைப்பையே முழுமையாக மாற்றியமைக்கும். புனே முதல் ஹைதராபாத் வரையிலும், ஹைதராபாத் முதல் சென்னை வரையிலும்,ஹைதராபாத் முதல் பெங்களூரு வரையிலும் அமையவுள்ள இந்த வழித்தடங்கள் ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் ஒரு முக்கிய கேம் சேஞ்சராக மாறும். ஹைதராபாத் ஒரு அதிவேக மையமாக உருவெடுக்கும்.ஹைதராபாத் முதல் அமராவதி வரையிலான பயணம் 70 நிமிடங்களாகக் குறையும். ஹைதராபாத் முதல் சென்னை வரையிலான பயணம் 3 மணி நேரமாக மாறும். ஹைதராபாத் முதல் பெங்களூரு வரையிலான பயணம் 2 மணி நேரம் 35 நிமிடங்களாக இருக்கும். ஹைதராபாத் முதல் புனே வரையிலான பயணம் 2 மணி நேரமாக இருக்கும். ஹைதராபாத் முதல் மும்பை வரையிலான பயணம் 3 மணி நேரத்திற்கும் குறைவாக இருக்கும். இது இப்பகுதியின் தோற்றத்தையே முற்றிலும் மாற்றும். இது மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை எற்படுத்தும். இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பொருளாதாரமும் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை