உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாட்ஸாப் வாயிலாக மோசடி; மத்திய அரசு எச்சரிக்கை

வாட்ஸாப் வாயிலாக மோசடி; மத்திய அரசு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : பிரபல சமூக ஊடகமான, 'வாட்ஸாப்' வாயிலாக அரங்கேற்றப்படும் பல்வேறு சைபர் குற்றங்கள் மற்றும் பொருளாதார மோசடிகளுக்கு எதிராக ஆலோசனை மற்றும் எச்சரிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், போலீஸ் சிந்தனை குழுவான, பி.பி.ஆர்.டி., எனப்படும், போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு:வாட்ஸாப் தகவல் பரிமாற்ற ஊடகத்தை பயன்படுத்தி ஏழு விதமான மோசடிகள் அரங்கேற்றப்படுவதை கண்டறிந்துஉள்ளோம். வீடியோ அழைப்பு, வேலை வாங்கி தருவதாக வரும் அழைப்புகள், முதலீட்டு திட்டங்கள், ஆள்மாறாட்டம், மொபைல் திரையை பகிர்ந்து கொள்ளுதல், மொபைல் போனை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது, 'மிஸ்டு கால்' உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த முறைகேடுகள் அரங்கேற்றப்படுகின்றன.ஆள்மாறாட்ட மோசடியில், வாட்ஸாப் பயனாளரின் மொபைல் போனை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் மோசடி பேர்வழிகள், அவர்களின் தொடர்பில் உள்ள நபர்களிடம் பணம் கேட்டு முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.வாட்ஸாப் வீடியோ அழைப்பு வாயிலாக, ஆபாச உரையாடல் மற்றும் ஆடைகள் இன்றி உரையாடி, அந்த காட்சிகளை வைத்து, பயனாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகளும் நடக்கின்றன.அதேபோல, வெளிநாட்டு எண்களில் இருந்து மிஸ்டு கால் வருவதும் அதிகரித்து உள்ளது.குறிப்பாக, வியட்நாம், கென்யா, எத்தியோப்பியா, மலேஷியா உள்ளிட்ட நாடுகளின் எண்களில் இருந்து இந்த அழைப்பு கள் வருகின்றன. இதுபோன்ற அழைப்புகளை ஏற்க வேண்டாம்.முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் வாட்ஸாப் தகவல்கள், அழைப்புகளை நிராகரிக்கவும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

matheshkrishna
ஜன 22, 2024 22:51

இது போன்ற குற்றங்கள் செய்வோரை கண்டுபிடிக்க தனி படை விரைந்து செயல்பட்டு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்


W W
ஜன 22, 2024 11:36

Call from UK No also comings I am Luckily escape from a Investment scam


கணேஷ்
ஜன 22, 2024 07:47

வேலை வாய்ப்பு கொடிகட்டிப் பறக்குது. நாடு முன்னேறிக்கிட்டிருக்குது. ராமராஜ்யம் வந்திடிச்சு.


enkeyem
ஜன 22, 2024 10:51

வேலைவாய்ப்பு கொட்டித்தான் கிடக்கிறது. ஆனால் பாமர மக்கள் தான் ஆளும் அரசின் சூழ்ச்சியால் குடிக்கு அடிமையாகி மட்டையாகி கிடக்கிறார்கள்.


ஆரூர் ரங்
ஜன 22, 2024 07:38

இதில் வசூலான மாநில ஜிஎஸ்டி யை தமிழக அரசு ஸ்ரீ ராமர் ஆலயத்துக்கு???? அல்லது மத்திய அரசிடம் அளித்து விடலாம். அப்போதுதான் திராவிட மதசார்பின்மை திகழும்.


Godyes
ஜன 22, 2024 06:58

It is timely and good warning.


Kasimani Baskaran
ஜன 22, 2024 05:14

காலர் ஐடி கூட வேறு நாட்டில் இருந்து வந்தது போல இருப்பதை வைத்து ஏமாந்து விட வேண்டாம். அதாவது அறிமுகமில்லாத எண்ணிலிருந்து வந்தால் எடுக்க வேண்டாம்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ