உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஸ் - டேங்கர் லாரி மோதல்; பயணியர் 20 பேர் படுகாயம்

பஸ் - டேங்கர் லாரி மோதல்; பயணியர் 20 பேர் படுகாயம்

பாலக்காடு : பாலக்காடு அருகே, பஸ்சும் டேங்கர் லாரியும், நேருக்கு நேர் மோதிய விபத்தில், பயணியர் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சிற்றிலஞ்சேரி நீலிச்சிறை பகுதியில், நேற்று மாலை, 3:00 மணிக்கு, திருச்சூரில் இருந்து வந்த தனியார் பஸ்சும், எதிரில், பொள்ளாச்சியில் இருந்து வந்த டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.இந்த விபத்தில், பஸ் பயணியர் 20 பேர், படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், ஆலத்தூர் தாலுகா மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.விபத்தால், மங்கலம் பாலம் -கோவிந்தாபுரம் பாதையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வடக்கஞ்சேரி போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை