உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூடுதலாக ரூ.10 தர மறுப்பு; மாஜி ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தாக்கிய பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

கூடுதலாக ரூ.10 தர மறுப்பு; மாஜி ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தாக்கிய பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ரூ.10 கூடுதலாக கொடுக்க மறுத்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியை பஸ் கண்டக்டர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.எல். மீனா, கடந்த ஜன.,10ம் தேதி பஸ்ஸில் பயணம் மேற்கொண்டார். அப்போது, ரூ.10 கூடுதல் கட்டணமாக கண்டக்டர் ஞான்சியாம் சர்மா கேட்டுள்ளார். அதனை தர ஆர்.எல்.மீனா மறுத்துள்ளார். இதனால், கடுப்பான கண்டக்டர், ஆக்ரா சாலையில் உள்ள கனோடா பஸ் நிறுத்தத்தில் அவரை இறக்கி விடாமல், அடுத்த ஸ்டாப்பில் இறங்கச் சொல்லியிருக்கிறார். இதனால், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கண்டக்டர் சர்மா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீனாவை தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், கண்டக்டர் ஞான்சியாம் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரை சஸ்பெண்ட் செய்து ஜெய்ப்பூர் நகர போக்குவரத்து சேவை இயக்குநரகம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

SRIRAM
ஜன 13, 2025 15:45

உன் பேருலேதெரியுது நீ எவ்வளவு பெரிய உபி ன்னு.... நடந்தது ராஜஸ்தான் ல உபி...


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 20:03

நடந்தது எங்கே என்று நான் 12:38 க்கே பதிவிட்டு விட்டேனே.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 14:37

மூளை இல்லாததால் தான நீயெல்லாம் தனிமனித விமர்சனம் எழுதி வயத்தை கழுவறே.


எஸ் எஸ்
ஜன 13, 2025 14:33

ஐ ஏ எஸ் அதிகாரியாக இருந்தவர் பஸ்ஸில் பயணம் செய்யும் ஒரு சாதாரண நிலையில் உள்ளார் எனில் ஆச்சரியம்


Sidharth
ஜன 13, 2025 14:16

இதுதான் திராவிட மாடலா -சங்கிகள் கொதிப்பு


Sampath
ஜன 13, 2025 13:51

பாதி வழியில் பெண்ணை இறக்கி விட்ட நடத்துனர்கள் திருச்சி கல்லணையை சேர்ந்தவர் சர்மிளா. கோவையில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பொங்கல் விடுமுறையில் ஊருக்கு செல்ல சிங்காநல்லூரில் இருந்து பஸ் ஏறினார். மகள்களுக்காக புத்தாடைகள், பலகாரங்கள் அடங்கிய கட்டை பையை எடுத்து சென்றார். சர்மிளா தமக்கு டிக்கெட் எடுத்தார். அந்த கட்டைப்பைக்கு 500 ரூபாய் லக்கேஜ் கட்டணம் தரும்படி கண்டக்டர் கேட்டுள்ளார். சர்மிளா கொடுக்க மறுத்ததால், அவரை வெள்ளகோயில் அருகே இறங்கி விட்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மற்றொரு பஸ்சில் சர்மிளா ஏறினார். சீட் கிடைக்காததால் படிக்கட்டு அருகே கீழே அமர்ந்து பயணித்தார். வெள்ளக்கோயில் உணவகம் ஒன்றில் பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது சர்மிளாவை ஏற்கனவே இறக்கிவிட்ட பஸ் கண்டக்டரும், தற்போது அவர் வந்த பஸ்சின் கண்டக்டரும் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின், பஸ் கிளம்பும்போது, சர்மிளாவிடம் 2வது பஸ் கண்டக்டரும் கட்டை பைக்கு 500 ரூபாய் லக்கேஜ் தரும்படி கேட்டு உள்ளார். சர்மிளா தரமுடியாது என வாக்குவாதம் செய்ததால் அவரை பாதி வழியில் இறக்கி விட்டுள்ளன


subramanian
ஜன 13, 2025 22:41

பஸ் கண்டக்டர் திமுக ஆள்.


sankaranarayanan
ஜன 13, 2025 13:48

ஜெய்ப்பூரில் நடந்து முடிந்தவுடனேயே திருச்சி - கல்லணையில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிற்கு நேர்ந்த அவலத்தை பாருங்கள் அவரிடம் இருந்த இரண்டு பைகளையும் பாருங்கள் இவைகளுக்கு யாராவது லக்கேஜ் சார்ஜ் வசூலிப்பர்களா அப்படியே இருந்தாலும் ரூபாய் 500 என்று சொல்ல அந்த நடத்துனர்கள் இருவருக்கும் என்ன ஆதாரம் இருக்கிறது அப்படி சொல்ல. - என்னதான் இருந்தாலும் ஒரு பெண்ணை நடுவழியில் இறக்கிவிட அந்த ஊர்தி கண்டக்டர்கள் இருவரையும் பணி நீக்க செய்து அவர்களை சிறைக்கு அனுப்பவதே மேல்


Mario
ஜன 13, 2025 13:34

பிஜேபி அரசு


CHELLAKRISHNAN S
ஜன 13, 2025 13:47

that is why immediate action has been taken


Sampath
ஜன 13, 2025 13:53

இது டி ம் கே அரசு


Visu
ஜன 13, 2025 12:50

Tasmac ல வேலை பார்த்திருப்பாரோ


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 12:38

நல்ல காலம், இது தமிழ் நாட்டில் அல்ல. இதுவே இங்கே நடந்திருந்தால், ஒருத்தர் சட்டையை கழட்டிட்டு சாட்டையை எடுத்து கிட்டு வருவார். வேறு சிலர், இதுவா விடியல், திராவிட மாடலா என்று கூப்பாடு போட்டிருப்பார்கள். தமிழ் நாட்டில் இது ஒருபோதும் நடக்காது.


தா நா மாடல் பற்றாளர், kk nagar
ஜன 13, 2025 13:42

விசுவாசம் புல்லரிக்குது. என்ன இருந்தாலும் மாடல்க்கு போட்டியே போட முடியாது. வேங்கை வயல், பிளாஸ்டிக் chair, கள்ளக்குறிச்சி 10 லட்சம்....உன்ன போல அடிமைகள் 200 ரூவா மக்கள் வரி பணத்தில்...நீ கலக்கு வை


Nagarajan D
ஜன 13, 2025 14:07

சட்டையை கழட்டிட்டு முதலில் வந்தவரு யாரு சார்... அண்ணாமலை செய்தது மக்களுக்காக முதலில் சட்டையை கிழிச்சிட்டு வந்தவரு யாருக்காக சட்டையை கிழிச்சிட்டு வந்தாரு?


Pandi Muni
ஜன 13, 2025 15:11

தமிழகமா இருந்திருந்தா சட்டைய கிழிச்சிக்கிட்டுள்ள வெளிய ஓடிவந்திருப்பார். மாற்றி சொல்லுறியே


SRIRAM
ஜன 13, 2025 15:47

அண்ணனுக்கு 200 ரூவா பார்சல்


V Rajasekaran
ஜன 13, 2025 12:22

பஸ்ஸில் இது போன்ற அதிகாரிகள் போவது ஆச்சர்யம் . நடத்துனர் செயல் கண்டனத்திற்கு உரியது . தகுந்த தண்டனை தரப்பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை