உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டிய டிரைவர் டிஸ்மிஸ்

கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டிய டிரைவர் டிஸ்மிஸ்

மும்பை : மஹாராஷ்டிராவின் மும்பை - புனே வழித்தடத்தில், மாநில அரசு சார்பில், 'இ - ஷிவ்னேரி' என்ற பெயரில் பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த பஸ்சில் நேற்று பயணித்த பயணி ஒருவர், மொபைல் போனில் கிரிக்கெட் பார்த்தபடி, பஸ்சை டிரைவர் ஓட்டியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதை மொபைல் போனில் வீடியோ எடுத்த அந்த பயணி, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் ஆகியோரை, 'டேக்' செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வேகமாக பரவியதை அடுத்து, சம்பந்தப்பட்ட டிரைவரை பணியில் இருந்து நீக்கி, மாநில சாலை போக்குவரத்து கழகம் நேற்று உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
மார் 24, 2025 02:41

நல்ல பணி செய்தது மகாராஷ்டிரா அரசு , ஆனால் கருநாடக காங்கிரஸ் அரசு மெமோ மாத்திரம் கொடுத்து ஒரு ட்ரைவரை வார்ன் செய்தது கேள்விக்குரியதாகிறது


முக்கிய வீடியோ