உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் பஸ் கவிழ்ந்து பயங்கர விபத்து; 8 பேர் பரிதாப பலி: 30 பேர் காயம்

பஞ்சாபில் பஸ் கவிழ்ந்து பயங்கர விபத்து; 8 பேர் பரிதாப பலி: 30 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாபில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மாவட்டம் ஹாஜிபூர் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உள்ளூர் மக்களின் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் பஸ்ஸை அதிவேகமாக இயக்கியதால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்பது தெரியவந்துள்ளது. பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜூலை 07, 2025 19:54

இவ்ளோ ரோடுகள் இருக்கே. எங்கேயாவது ஸ்பீடு லிமிட் பலகை உண்டா? கேட்டா இண்டர்நேஷனல் தரத்துக்கு ரோடு போட்டிருக்கோம் ஹைன்னு பீத்தல் வேற. கண்டவனுக்கு கார், பஸ் வித்து உலகத் தரத்தை வளர்க்கிறாங்க. எந்த டிரைவரும் எட்டு மணி நேரம் வேலை செஞ்சா 16 மணி நேரம் ரெஸ்ட்னு சட்டம் போடுங்க.


Nada Rajan
ஜூலை 07, 2025 17:28

ஆழ்ந்த இரங்கல்